FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அம்மிணி கொழுக்கட்டை

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கால் கிண்ணம் தண்ணீர் ஊற்றி, அதில் இடித்த இஞ்சி, இடித்த பச்சை மிளகாய், உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.

12 செப்டம்பர் 2026, 10:06 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்

இடியாப்ப மாவு - 1 கிண்ணம்

இஞ்சி - 1 இஞ்ச்

Advertisement

Advertisement

பச்சை மிளகாய் - 2

உப்பு - அரை தேக்கரண்டி

கடுகு , எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - தலா 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

இட்லிப் பொடி - 3 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கால் கிண்ணம் தண்ணீர் ஊற்றி, அதில் இடித்த இஞ்சி, இடித்த பச்சை மிளகாய், உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் தீயைக் குறைத்து 1 கிண்ணம் இடியாப்பம் மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொண்டே கட்டி இல்லாமல் கிளறுங்கள்.

மாவு ஒன்றாகச் சேர்ந்ததும் மூடி 5 நிமிடம் ஆறவிடுங்கள். கையால் பிடிக்கக்கூடிய சூட்டுக்கு வந்ததும் நன்றாகப் பிசைந்து, சிறுஉருண்டைகளாக உருட்டுங்கள். இந்த உருண்டைகளை இட்லிப் பாத்திரத்தில் வைத்து 10 -12 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்ததும், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வதக்குங்கள். அதன் பிறகு இட்லிப் பொடியை சேர்த்து ஒரு சில விநாடிகள் மட்டும் கிளறி, ஆவியில் வேக வைத்த அம்மிணி கொழுக்கட்டையைச் சேர்த்து மெதுவாகப் பிரட்டி, இட்லிப் பொடி எல்லா உருண்டைகளிலும் நன்றாக ஒட்டும் வரை 2- 3 நிமிடங்கள் வதக்கி இறக்குங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments