ஞாயிறு கொண்டாட்டம்

ஹாட் ஸ்பாட் 2

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. ஹாட் ஸ்பாட் படத்தின் முதல்பாகம் கடந்த 2024 - ஆம் ஆண்டு வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக்.

ஹாட் ஸ்பாட் திரைப்படம் சமூகத்தில் நிகழும் முக்கியமான பிரச்னைகளை மையமிட்டு உருவாகி இருந்தது. இரண்டாம் பாகமும் அதே பாணியில் உருவாகி வெளிவந்துள்ளது. இந்தப் படத்தில், நடிகர்கள் அஷ்வின், எம்.எஸ்.பாஸ்கர், பிரியா பவானி சங்கர், ரக்ஷன், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டதை இந்த தலைமுறைக்கு எடுத்துக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.

அறிவியல் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் சமூகத்தில் இருக்கிற ரணங்களைப் பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வையை முன் வைக்கும் விதமாக இந்தப் படம் அமைந்துள்ளது. கலாசாரம், பண்பாட்டுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தீர்க்கமான ஓர் அரசியல் பார்வையும் இருக்கிறது.

அதே போன்று திரை கவர்ச்சியில் முழ்கிக் கிடக்கும் ரசிகர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவும் திரைக்கதை அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

கல்லூரி மாணவி தற்கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் மீது வழக்கு

SCROLL FOR NEXT