FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தியாகராஜன் குமாரராஜா திரைப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிய இயக்குநர்!

தியாகராஜன் குமாரராஜா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது...

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:13 pm IST
விஜய் சேதுபதி, தியாகராஜன் குமாரராஜா
பகிர்:

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் பாக்கெட் நாவல் திரைப்படத்துக்கு பிரபல இயக்குநர் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் (TDKF) மூலம் உருவாகும் பாக்கெட் நாவல் படத்தில் விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இதனைத் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், போஸ்டர் வெளியீட்டில் கதை, திரைக்கதை ஆண்ட்ரூ லூயிஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ தமிழில் லீலை, கொலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களையும் வதந்தி என்கிற இணையத் தொடரையும் இயக்கியவர்.

இவர் கிரைம் பின்னணியில் எழுதக்கூடியவர் என்பதால் பாக்கெட் நாவல் திரைப்படம் கிரைம் திரில்லராக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments