முகப்பு
தமிழ்மணி

காதலில் உறுதி

இன் றைய நாளில் ஆட வ ரும், பெண் டி ரும் தத் தம் இளம் பரு வத் தில் காதல் புரிந்து திரு ம ணம் செய்து கொள் வது அதி க மாகி வரு வதை நாம் காண் கி றோம். நவீன யுகத் தில் ஜாதி, மதம், நாடு, மொழி, தகுதி என்ற பாகு

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:33 PM
பகிர்:

இன் றைய நாளில் ஆட வ ரும், பெண் டி ரும் தத் தம் இளம் பரு வத் தில் காதல் புரிந்து திரு ம ணம் செய்து கொள் வது அதி க மாகி வரு வதை நாம் காண் கி றோம். நவீன யுகத் தில் ஜாதி, மதம், நாடு, மொழி, தகுதி என்ற பாகு பா டு கள் நெகிழ்ந்து வரு வ தா லும், ஊட கங் க ளில், பத் தி ரி கை க ளில், கதை க ளில், கவி தை க ளில் வரும் செய் தி க ளின் வலி மை யா லும் காதல் திரு மண விகி தம் உயர் வது இயல் பாகி வரு கி றது. ஆனால் எத னாலோ மனம் ஈர்க் கப் பட்டு, மனம் ஒன் றிப் பழ கி ய வர் கள் சட் டப் பூர்வ திரு ம ணம் வரை சென்று பெற் றோர் க ளுக் குத் தெரி யா மல் தனித்து வாழ்ந்த சில காலத் தி லேயே இரு வ ரும் மனம் அமை தி யி ழந்து மண மு றி வுக் குத் தயா ராகி வரு கின்ற விகி த மும் உயர்ந்து வரு கி றது.

÷த மி ழர் வாழ் வில் பன் னெ டுங் கா ல மாக, காதல், வீரம், ஈகை என்ற இம் மூன் றும் பின் னிப் பிணைந்து வரும் இயற் கை யான குண ந லங் கள்.

÷அன் றைய நாளில் தலை வ னும், தலை வி யும், காத லிக் கத் தான் செய் தார் கள். களவு மண மும், கற்பு மண மும் வழக் கத் தில் இருந் தன. எனி னும் ஒன் றிய உள் ளங் கள் விரை வில் ஒடி வ தில்லை. முறி வ தும் இல்லை.

÷சங் க கால காதல் காட்சி ஒன் றில் காத லின் மன உறுதி, காத லன் பால் கொண் டி ருக் கும் நம் பிக்கை இவற் றைக் காதலி வாயி லா கப் புல ன ழுக் கற்ற அந் த ணா ளன் கபி லன் நமக்கு ஒரு குறும் ப ட மா கவே படைத் தி ருக் கி றார்.

÷க ளவு மணம் புரிந்த தலை வன் ஒரு வன் பொருள் தேடி வர எண்ணி, தலை விக் குத் தக் க வாறு உறு தி மொழி பகன்று புலம் பெயர் கி றான். அவன் குறித்த காலம் கடந் தது. தலை வன் தந்த உறு தி மொழி வண் ணம் வந் தா னில்லை. தலை வி யின் தோழி கலக் க முற் றாள். ஏனெ னில், அத் தோ ழி தானே களவு மணம் நிகழ உட னி ருந்து உத வி ய வள்.

÷த லை வி யைச் சினந்து, அவள் அவ னால் ஏமாற் றப் பட் டதை எண்ணி வருந் திக் கூற லா னாள், ""உனது மனம் கவர்ந்த அந் தக் கள் வன் உன் னி டத் தில் அன் பு டை ய வன் இல்லை. அற நெ றி யில் பற் று றுதி உடை ய வ னும் இல்லை. ஏனோ அவ னி டத் தில் உள் ளம் செலுத் தி னாய்! உன் அவ லத்தை, பேத மையை எண்ணி வருந் து கி றேன்'' என் கி றாள்.

÷த லை விக்கு வந் ததே கோபம். தோழியை வெகுண் டாள். தலை வ னின் உறுதி பற் றி யும், அவ னின் நல் லி யல் பு கள் குறித் தும் விரித் து ரைக் கத் தொடங் கி னாள்.

÷""என் நலம் பற் றும் தோழியே! குளிர்ச் சி யான, வெண் மை யான திங் க ளில் "சிவந்த தீயை' எப் போ தா வது, யாரே னும் கண் ட னரோ? இல் லையே! அப் ப டித் திங் க ளில் "செந்தீ' உண் டா கு மா யின் என் தலை வ னி டத் தும் உள்ள உண் மை யில் பொய் இருக் கும். அவ ரையே பற் றுக் கோ டாக எண் ணும் எவர்க் கும் அளிக் கும் அவ னது உறு தி மொழி பொய் மை யா குமோ? எம் தலை வனே இவண் வரு வான்.

÷கு ளிர் நிழல் தரும் மரங் கள் சூழ்ந்த இடத் தில் உள்ள ஒரு நீர் நிலை யில் அதன் மேற் ப ரப் பில் குவளை மலர் ஒன்று பூத் தி ருக் கி றது. இவ் வ ழ கிய மலர் வெப் பத் தின் தன் மை யால் குவளை வெந்து வாடும், கரு கி வி டும் என எண் ணு ப வர் யார்?

ஒருக் கால் அம் ம லர் கரு கி டு மே யா னால் எம் தலை வன் வராது ஒழி வான் என் ப தும் உண்மை. ஞாலத்தை தன் ஒளிக் கற் றை க ளால் உயி ரூட் டும் கதி ர வ னி டத்து கருமை இருள் தோன் றுமோ? இங் ங னம் ஞாயிற் றின் ஊடே இருள் தோன்றி ஒளி குன் று மா யின் அன் புத் தலை வ னும் எனை மறந் தான்! ÷""எனவே, இனி நம் தலை வனை இழித்தோ, பழித்தோ கூறு வதை துறப் பா யாக'' என் றாள் தலைவி.

÷க ளவு மணம் கொண்ட தலை வ னின் மனத் திட் பத் தை யும், வினைத் திட் பத் தை யும், வெகு நுட் ப மாக இயற் கை யோடு இயைந்து வாதி டும் அன் றைய நாள் தலைவி எங்கே?

÷கண் ட தும் காதல், கொண் ட தும் திரு ம ணம், காலை யில் பிணக்கு, மாலை யில் மண விலக்கு என் றி டும் இற்றை நாள் செய்தி எங்கே?

÷"காதல் செய் வீர்' என் றான் மகா கவி பாரதி. ஒவ் வொரு காத ல னும், காத லி யும் முத லில் சங்க இலக் கி யம் படிக்க வேண் டும். கண் ணீ ரில் கரை யும் காத லாய் இல் லா மல், மனம் வெதும் பும் மண மாய் நில் லா மல், காலம் கால மாய் கற்பு நெறி யோ டும், களிப் போ டும் வாழ் வாங்கு வாழுங் கள். குறிஞ் சிப் புல வ னின் அந்த இனிய குறும் ப டத்தை கலித் தொ கைப் பாடல் க ளால் காண் போம்.

""பொய்த் தற்கு உரி யனோ? பொய்த் தற்கு உரி யனோ?

"அஞ் சல் ஓம்பு' என் றா ரைப் பொய்த் தற்கு உரி யனோ?

குன் ற கல் நன் னா டன் வாய் மை யின் பொய் தோன் றின்

திங் க ளுள் தீத் தோன் றி யற்று''

(கலி.பா.வரி: 21-24)



""வாரா தமை வனோ? வாரா தமை வனோ?

வாரா தமை கு வான் அல் லன் மலை நா டன்,

ஈரத் துள் இன் ன வை தோன் றின், நிழல் கயத்து

நீருள் குவளை வெந் தற்று''

(கலி.பா.வரி: 28-31)

""துறக் கு வன் அல் லன் துறக் கு வன் அல் லன்

தொடர் வரை வெற் பன் துறக் கு வன் அல் லன்

தொடர் புள் இனை யவை தோன் றின், விசும் பில்

சுட ருள் இருள் தோன் றி யற்று.''

(கலி.பா.வரி: 36-39)

முழு கட்டுரையைப் படிக்க →