முகப்பு
தமிழ்மணி

பாதி வெண்பாவில் பத்து அவதாரங்கள்!

காளமேகப் புலவர் ஒரு சமயம் "திருமலைராயன்' என்னும் குறுநில மன்னரைக் காணச் சென்றார். அப்போது, அம்மன்னரின் அவைப் புலவராக வீற்றிருந்த "அதிமதுரகவி' என்பவர், காளமேகத்தைப் பார்த்து, ""நீ யார்? உனக்கென்ன தெரிய

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

காளமேகப் புலவர் ஒரு சமயம் "திருமலைராயன்' என்னும் குறுநில மன்னரைக் காணச் சென்றார். அப்போது, அம்மன்னரின் அவைப் புலவராக வீற்றிருந்த "அதிமதுரகவி' என்பவர், காளமேகத்தைப் பார்த்து, ""நீ யார்? உனக்கென்ன தெரியும்?'' என்று அலட்சியமாகக் கேட்டார்.

""திருட்டுக் கவிப்புலவர்களின் காது அறுத்து

கன்னத்தில் அடிக்கும் காளமேகப் புலவன் நான்''

என்று அவருக்குப் பாட்டிலேயே பதில் கூறினார் காளமேகம். "அரசன் நம் பக்கம் இருக்கிறான்' என்ற துணிவில் அதிமதுரக்கவி தன் மனம்போனவாறு காளமேகத்திடம் கேள்விகளைக் கேட்க, அவற்றுக்கெல்லாம் தக்க விடை சொல்லிக் கொண்டிருந்தார் காளமேகம்.

Advertisement

அதிமதுரக்கவி அப்படியும் அவரை விடுவதாக இல்லை. காளமேகத்தைப் பார்த்து, ""திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரு வெண்பாவில் அடக்கி உன்னால் பாடமுடியுமா?'' என்றார். ஆனால், காளமேகப் புலவரோ பாதி வெண்பாவிலேயே திருமாலின் பத்து அவதாரங்களையும் பாடிவிட்டார். அப்பாடல் இதுதான்!



""மெச்சுபுகழ் வேங்கடவா! வெண்பாவில் பாதியில்என்

இச்சையில் உன்சன்மம் எடுக்கவா? - மச்சா, கூர்மா, கோலா, சிங்கா, வாமா, ராமா, ராமா, ராமா,

கோபாலா, மா - ஆவாய்''

"ராமா' என்று மூன்று முறை சொன்னது பரசுராமனே, தசரத ராமனே, பலராமனே என்பதாகும். இறுதியில் "மா' என்று சொன்னது, இனிக் கலியுகத்தில் குதிரை மீது வரப்போகும் "கல்கி' அவதாரமாகும். (மா-குதிரை).

ஒரு வெண்பாவில் பத்து அவதாரங்களைப் பாடச்சொன்ன அதிமதுரகவியின் வாயை, பாதி வெண்பாவிலேயே பாடி அடைத்துவிட்டார் கவிக் காளமேகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments