தமிழ்மணி

சங்கப்பலகை: களவியலில் அறிவியல்

""அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்''

க. குமார்

""அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்''

(குறள்-1120, அதி.112, களவியல்)

"மென்மையான அனிச்சப் பூவும், அழகிய பேடு என்ற பெண் அன்னத்தின் உடலிலிருந்து உதிரும் மிக நுண்ணிய மென்மையான தூவியும் இளம் பெண்களின் பாதத்திற்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் செய்யும்' என்பது இக்குறளின் பொருள். இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள செம்பொருள் மற்றும் குறிப்புப் பொருள்களான, அனிச்சம், அன்னம் மற்றும் நெருஞ்சிப்பழம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.

அனிச்சம்

அனிச்சமலர் மோந்து பார்க்கும் அளவில் குழையும் தன்மையுடையதாதலால், இதன் உயிர்தன்மையை அறியலாம். இம்மலருக்குக் காம்பு உண்டு என்பதை 1115-ஆவது குறள் கூறுகிறது. மேலும், அனிச்சம் என்பது சிறுமரம் என்றும், அதன் மலர்கள் அழகானவை; மிகமிக மெல்லியவை; ஆயினும் மோப்பக்குழையும் இயல்பு இம்மலர்களில் இல்லை ஆதலின், இது அனிச்சமன்று என்றும் ஒரு கருத்து உண்டு. அனிச்சம் என்பது பழங்காலத்தில் இருந்ததாகவும் தற்போது இந்த இனம் அழிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தாவரத்தை "இந்தியப் பெருமிதம்' என்று தாவரவியலாளர் பாராட்டுவர்.

அன்னம்

அன்னம் வனப்பும், வசீகரமும் மிக்க நீர்ப்பறவை. இனப்பெருக்க காலங்களைத்தவிர பல நேரங்களில் கூட்டமாக வாழக்கூடியவை. அன்னங்களில் தற்போது எட்டுவகை இனங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றன. அவை: ஊமையன்னம், காரன்னம், சீழ்கையன்னம், எக்காளன்னம் மற்றும் கருங்கழுத்து அன்னம் ஆகியன.

ஊமையன்னம்: இவ்வகை அன்னங்களில் சிவந்த அலகின் அடியில் ஒரு கரிப்பு புடைப்பு உள்ளது. எடை அதிகம் மிக்கது. 17 கி.கி. 5 அடி நீளமுடைய இவ்வன்னம்தான் பறக்கும் பறவைகளில் எடை அதிகம் மிக்கவை.

காரன்னம்: சிவந்த அலகு, சிறகின் முதல் இறகைத்தவிர உடலின் மற்ற பகுதிகள் கருப்பு நிறமுடையது.

சீழ்கையன்னம்: சீழ்கையொலி போன்ற குரலால் இப்பெயர் பெற்றது. கால்களும், அலகும் கருமை உடையன. கண்களின் அருகில் மஞ்சள் நிறக்குறி ஒன்று உள்ளது. வெண்பனி நிறம் உடையது.

எக்காளன்னம்: இவ்வகை அன்னங்கள் உருவில் பெரியன. ஆனால் ஊமை அன்னதைவிட எடை குறைவானது.

கருங்கழுத்தன்னம்: கருத்ததலையும், அழ்ந்த கருப்பு கழுத்தும் உடையது. உடலின் ஏனைய பகுதி தூய வெண்ணிறமாக உள்ளன. சிவந்த அலகுடையவை. கண்களுக்கு அருகில் வெண்ணிறப்பட்டை உண்டு.

நெருஞ்சிப்பழம்

இக்குறட்பாவில் நெருஞ்சிப்பழம் என்ற சொல் பேச்சு வழக்கிலிருந்து மாறுபடுவதைக் காணலாம். இச்சொல்லை தாவர அறிவியல் நோக்கோடு நோக்கும்போது, இத்தாவரம் "டிரிபுலஸ் டெரஸ்டிரிஸ்' (பழ்ண்க்ஷன்ப்ன்ள் ற்ங்ழ்ழ்ங்ள்ற்ழ்ண்ள்) என்ற தாவரப் பெயர் கொண்டது. இருவித்திலைத் தாவரப் பிரிவைச் சார்ந்தது.

ஒவ்வொரு கணுவிலும், இரு சிறகு வடிவக் கூட்டிலை உடையது. மலர்கள் இருபால் மலர் ஒழுங்கான ஆரச்சமசீருடைய, நீளமான, ஆழ்ந்த, மஞ்சள் நிறமான, ஐந்தங்கச் சூலகக் கீழ்ப் பூக்கள் மிக அழகாக தோன்றுகின்றன. 5 புல்லி இதழ்களும் இணையாமலும், ஈட்டி வடிவாகவும், நழுவும் இதழ் ஒழுங்குடன் பசுமையுடனும் விளங்குகின்றன.

சூலகம் 5 அறைகளைக் கொண்டது. சூல்பையின் வெளிப்புறத்தில் கூர்வளரிகள் உள்ளன. முனையில் நேரான சூலகத்தண்டும், 5 தடிப்புகள் பெற்ற சூலக மூடியும் உண்டு. கனி 5 கோணமுடையது. சூலகம் பழமாக (கனி) வளர்ச்சியுறும்போது சூல்பையின் வெளிப்புறத்தில் உள்ள கூர்வளரிகள் தகவமைப்பின் (அஈஅடபஅபஐஞச) காரணமாக கனியுறையோடு சேர்ந்து கூரிய முள்ளாக மாறியுள்ளது. இந்த வெடிகனி 5 பகுதிகளாக வெடிக்கும்.

இவ்வாறாக, பழத்தின் மேலுறையானது கடினமனதாகவும், ஐந்து முகம்கொண்ட முட்களாகவும் மாறியுள்ளதை உணர்த்த வள்ளுவர் "நெருஞ்சிப்பழம்' என்றே குறிப்பிடுகிறார். இக்குறட்பாவை நோக்கினால் அக்காலத்தில் நெருஞ்சிப்பழம் என்ற சொல்லே வழங்கபட்டிருக்க வேண்டும். காலப்போக்கில் நெருஞ்சிப்பழம் என்ற சொல் "நெருஞ்சிமுள்' என்ற ஆகுபெயராயிற்று.

மேலும், பரிமேலழகர், "முள் என்ற சொல் வலிதலுடைமையின் அல்லது வன்பொருளாகக் கருதப்படுவதால் இதனைப் பெண்களின் பாதத்திற்கு குறிப்புப்பொருளாக ஒப்பிடவில்லை. ஆதலால் பழம் என்றார்' என்பர். இவ்வுரையசிரியரின் கூற்றுபடி செம்பொருளேயன்றி குறிப்புப் பொருளும் அடினலனழியமைகாகக் பழம் என்று குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார்.

மேற்சொன்ன நெருஞ்சிப்பழம் என்ற சொல் அடிநலனழியமைக்காக மட்டுமே பயன்படுத்தவில்லை, மாறாக அதன் உட்பொருளாக மேலே குறிப்பிட்டுள்ள அறிவியல் உண்மைகளை தன்னகத்தே பெற்றுள்ளது. இதன்மூலம் திருக்குறள் அற இலக்கியத்தையும் கடந்த ஓர் அறிவியல் இலக்கியம் என்பதையும் அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT