தமிழ்மணி

சொல் புதிது - 12

மொழிக்கு முன் உடல்மொழியே உரையாடலாக இருந்திருக்கும். மொழிக்கு எழுத்து வருவதற்கு முன் சொல்லாடல்தான் உரையாடலாக இருந்திருக்க முடியும்.

முனைவர் ம. இராசேந்திரன்

மொழிக்கு முன் உடல்மொழியே உரையாடலாக இருந்திருக்கும். மொழிக்கு எழுத்து வருவதற்கு முன் சொல்லாடல்தான் உரையாடலாக இருந்திருக்க முடியும். இப்போதும் எழுத்தறியாத மக்கள் சொல்லாடல் வழியேதான் உரையாடுகிறார்கள். ஆனால், இன்றைய அறிவியல் எழுத்து வழியேயும் உரையாட வழி வகுத்திருக்கிறது.

உரையாடல் என்பது ஒருவருக்கொருவர் நேருக்குநேர் பேசிக்கொள்வது. இதற்கு எழுத்துத் தேவையில்லை. கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருப்பவரோடும் உரையாட எழுத்துப் பயன்பட்டது. கடிதம் எழுதினோம். கடிதத்திற்குப் பதில் வருகிறபோது மீண்டும் உரையாடல் தொடங்கியது. கடிதம் எழுதிக் காத்திருந்து, பதில்பெற்று உரையாடுவதில் காலம் போனது; காத்திருப்பதற்கு இப்போது நேரம் இல்லை; பொறுமையும் இல்லை; தேவையும் இல்லை. மின் அஞ்சல் அனுப்பிப் பதில்வரக்கூடக் காத்திருக்க வேண்டாம்.

நேருக்குநேர் உரையாடலில் பதிலுக்குக் காத்திருப்பதில்லை. உடனுக்குடன் உரையாடல் தொடரும். கடிதத்தைப் போல காத்திருக்காமல் நேருக்குநேர் உரையாடுவதைப் போல் தொலைவில் இருப்பவர்களுடனும் உரையாட Chat பயன்படுகிறது. உரையாடல் எழுத்தாடலாக மாறியது. பேசுவதைப்போல் விரைவாக எழுத்துவழி உரையாடல் நடைபெற சொற்களின் எழுத்துகளைக் குறைத்தனர். Check என்பதற்குப் பதிலாக இட்ந் என்றும் For என்பதற்குப் பதிலாக 4 என்றும் எழுத்துகளை மாற்றி, தொடர்களைச் சுருக்கிப் பயன்படுத்துகின்றனர். அகராதிகளிலும் புதுப்புதுச் சொற்கள் திரிந்த நிலையில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இன்றைய இளைஞர்கள் தமக்கான எழுத்துமொழியையும் சுருக்கச் சொற்களையும் இட்ஹற் இல் நாள்தோறும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இது மொழியின் இலக்கண எல்லைகளை உடைத்துக் கொண்டிருக்கின்றன என்று மொழி ஆய்வாளர்கள் கவலை அடைந்து வருகின்றனர். தமிழிலும் இட்ஹற் செய்கிறார்கள்.

இந்த Chat உத்தியை  Doug Brown Utßm David R.Woolley 1973- இல் கண்டறிந்தனர். 1980 முதல் மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனாலும் நேருக்குநேர் உரையாடலில் கிடைக்கும் முகம் பார்த்துப் பேசும் வாய்ப்பு இல்லாத உரையாடலாகவே இது இருந்தது. இந்த ஆண்டு (2014) முதல் தொலைவில் இருப்பவர்களின் முகம் பார்த்துப் பேசவுமான video chat வசதியும் கிடைத்துள்ளது. இதனால் தூரம் தொலைந்துபோய் இருக்கிறது. தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட காலமும் கரைந்துபோய்க் கொண்டிருக்கிறது.

இவ்வாறு தொலைவையும் காலத்தையும் கடந்து உரையாடல் நடத்தும் இந்த Chat  என்பதற்கு வாசகர்கள் கூறியுள்ள தமிழ்ச் சொற்கள் வருமாறு:

ப. இரா. இராசஅம்சன் - அளவளாவுதல், அரட்டை, உரையாடல், கருத்துப் பரிமாற்றம், உணர்வுப் பரிமாற்றம், பகிர்வு.

முனைவர் பா.ஜம்புலிங்கம் - அலுவல்சாராப் பேச்சு, குறுஞ்செய்தி, குறும்பேச்சு.

சி.இராமச்சந்திரன் - வலை அரட்டை

செ.சத்தியசீலன் - வரைமுறை இல்லா உரையாடல், பொருள்குறியா உரையாடல்.

பழனி சோ. முத்துமாணிக்கம் - வெற்றுரையாடு

பொன்.இளங்கோவன் - அளவளாவுதல்

சோலை. கருப்பையா - வலைப்பக்கச் செய்திப் பரிமாற்றம், கணிப்பொறிக் கலந்துரையாடல்

கோ.மன்றவாணன் - சொல்லாடல், கதைப்பு, அலப்புரை, கலந்துரையாடல், வலையாடல், வலை அளாவல், வலைப்பேசல், வலை உரையாடல், இணைய உரையாடல்

என். ஆர். ஸத்தியமூர்த்தி - வலைச் சொல்லாடல்

இட்ஹற் என்பது அரட்டை மட்டுமல்ல. இப்போது தகவல் தொழில்நுட்ப அலுவலகப் பயன்பாட்டிலும் இடம்பெறத் தொடங்கிவிட்டது. அதனால், வீண்பேச்சாகவும் கொள்ளமுடியவில்லை. செல்பேசிகளிலும் இந்த வசதி வந்துவிட்டது என்பதால் கணிப்பொறியோடு மட்டும் குறைத்துக் கொள்ளமுடியவில்லை. உரையாடல் எழுத்துவழிமட்டும் நடந்தால் "எழுத்தாடல்' என்று சொல்லலாம். ஆனால், காணொலி (Video) வழியாகவும் நடைபெறத் தொடங்கிவிட்டதால் அப்படியும் சொல்லமுடியவில்லை.

எனவே, கோ. மன்றவாணன் கூறியிருக்கும் "சொல்லாடல்' என்பதை எடுத்துக் கொள்ளலாம்.

திருக்குறளில், சொல்லாடச் சோர்வு படும் என்றும்; சிலப்பதிகாரத்தில், சொல்லாடாள் சொல்லாடா நின்றாள் நங்கைக்குச் சொல்லாடுஞ் சொல்லாடுந் தான் என்றும், உரையாடல் போலவே சொல்லாடலும் இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவருடன் சொல்லாடலில் இருந்தேன் என்றும், காணொலிச் சொல்லாடலில் கூறினார் என்றும் பயன்படுத்தவும் வாகாக இருக்கிறது.

Chat - சொல்லாடல்

அடுத்தவாரத் தேடல் - Antibiotic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT