தமிழ்மணி

சொல் புதிது - 44

மாதம் பிறந்தால் வழி பிறக்குமாம்.தை மாதம் பிறந்திருக்கிறது. வழி பிறந்திருக்கிறதா? மாதம் பிறக்கிறது? வழி பிறக்குமா?

முனைவர் ம. இராசேந்திரன்

மாதம் பிறந்தால் வழி பிறக்குமாம்.தை மாதம் பிறந்திருக்கிறது. வழி பிறந்திருக்கிறதா? மாதம் பிறக்கிறது? வழி பிறக்குமா?

வரப்புகளில் நடந்து செல்பவர்கள், தை மாதம் அறுவடை முடிந்தபின் வயல்களின் குறுக்கே நடந்து செல்வார்கள். புதிய வழித்தடம் பிறக்கும். தை பிறந்தால் இப்படியும் வழி, புதிதாகப் பிறக்கும்; புதுப்பித்துக் கொள்ளும்.

வாழ்வதற்கு வழி வேண்டும்; இருக்கிற வழிகளைப் பார்க்க முடியாதவர்கள் - பார்க்க மறுக்கிறவர்கள், வாழ வழி இல்லை என்று மனம் வாடுகிறார்கள்.

அடைய வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. இலக்கு தெரிகிறது. ஆனால் வழி தெரிவதில்லை. பார்வையில் தெரியும் வழிகள் எல்லாம் பயணத்திற்குப் பயன்படுமா? இலக்கில் கொண்டு சேர்க்குமா? வழிகளில் பல, முட்டுச் சந்துகளாகலாம். தொடர்ந்து போனால், புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து சேர்க்கவும் சில வழிகள் காரணமாகலாம். திகைப் பூண்டை மிதித்தது போல் சில வழிகள் மயக்கம் தரலாம். தேடிப் போகிற வழிகள் இடையிலே குழப்பவும் செய்யலாம். ஆனாலும், இலக்கினை அடைய உரிய வாயில் இருக்கும்; அந்த வழிநடையைக் கண்டறிய வேண்டும்; அதில் பயணித்து இலக்கினை எட்ட வேண்டும்.

வயிற்றுக்கு வாயிலும் வழிநடையும் வாயாக இருக்கிறது; வீட்டுக்கு வாயில்படி; கோட்டைக்கும் கோயிலுக்கும் வாயில் உண்டு; வழிநடையும் உண்டு.

யோப்பா வாயில்: "நண்பனின் வாயில்'; "தாவீதின் மன்றாட்டுச் சுவர் வாயில்'; தாவீதின் வாயில் என்பது எருசலேம் பழைய நகர் வரலாற்றுச் சுவரிலுள்ள கல்லாலான பெரும் நுழைவாயில் ஆகும். இது எருசலேம் பழைய நகரில் சுவரிலுள்ள எட்டு வாயில்களுள் ஒன்று. இந்த வாயில் மட்டுமே சுவருக்குச் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. யாரும் எளிதில் நுழையாமல் தடுப்பதற்காக இப்படி அமைக்கப்பட்டிருக்கலாம்.

தங்க வாயில்: கிறிஸ்தவ இலக்கியங்களில் காணப்படுகிறது. "புனிதப் பிரசன்னம்' இவ்வாயில் வழியாக வெளிப்பட்டது என்பதும், மீண்டும் மீட்பர் வரும்போது தற்போதுள்ள வாயில் நீக்கப்பட்டுப் புதிய வாயில் உருவாகும் என்பதும் யூதர்களின் நம்பிக்கையாம்.

வாயிலோ, வழிநடையோ எல்லோருக்கும் எப்போதும் திறந்திருக்கும் என்று சொல்ல முடியாது. திறந்திருந்தாலும் எல்லோரும் செல்ல அனுமதிக்கும் என்றும் சொல்ல முடியாது. வாயில் மூடி இருந்தாலும் சிலநேரம் வழிநடை திறந்திருக்கும். வழிநடை மூடப்படும் வாய்ப்புகளும் உண்டு. வாழ்நாள் வழியடைக்கும் கல்லைப்பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அனுமதி பெற்றவர்கள் மட்டுமே உள்ளே செல்லவும் இருக்கவும் பார்க்கவும் பயன்பெறவும் முடியும். அவர்களுக்கு மட்டுமே வழிகள் திறக்கும். இணைய தளத்திற்குள் செல்லவும் பயன்பெறவும் அஸ்ரீஸ்ரீங்ள்ள் வேண்டும். இதனைத் தமிழில் எவ்வாறு சொல்லலாம்? வாசகர்களின் பரிந்துரை வருமாறு:

* உபேந்திரன் - இயைவு

* இராம.வேதநாயகம் - ஒப்புதல்/ சம்மதம்

* நா.முத்தையா, வெ.ஆனந்தகிருஷ்ணன் - அணுக்கம்/ அணுக்கத் தன்மை

* கு.இரவிச்சந்திரன் - சென்றடையும் வழி/ கிட்டுதல்/ ஈட்டுதல்/ கிடைத்தல்

* அ.அழகையா - செல்வதற்கான அல்லது அடைவதற்கான உரிமை

* ப.இரா.இராச அம்சன் - அணுகுமுறை/ இயங்குரிமை/ வழி/ நுழைவுரிமை

* என்.ஆர்.ஸத்யமூர்த்தி - அணுகல் / அணுக்கம்

* கோ.மன்றவாணன் - இயைவு / இயல்தகை/ அடைதகை/

பெறுதகை/ அணுக்கம்/ அடைதல்/ அடைவழி/ வாயில்வழி/ செல்வழி/ நுழைவுவழி

* ஜனநேசன் - உள்நுழையும் வாய்ப்பு/ பங்கேற்கும் வாய்ப்பு/ அணுகும் வாய்ப்பு

* நா.கிருஷ்ணவேலு - வழி/ நுழைவுஉரிமை/ ஓரிடத்தை அடைய உதவும் பாதை

அஸ்ரீஸ்ரீங்ள்ள் என்பது வழியாக இல்லாமல், வழியில் சென்று இலக்கை அடையும் வாய்ப்பாகவும் உரிமையாகவும் இருக்கிறது. வாயில் என்பது வழியாக மட்டும் இல்லாமல் வழி தொடங்கும் இடமாகவும், அனுமதி பெறுகிற அல்லது மறுக்கிற இடமாகவும் இருக்கிறது. வாயில் வேண்டலும் மறுத்தலும் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. ஐம்பொறிகளைப் "பொறிவாயில்' என்கிறார் திருவள்ளுவர். வாயிலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே ஆட்சியாகிறது. "ஐம்பொறி ஆட்சிகொள்' என்று பாரதியார் ஆணையிடுகிறார். எனவே, அஸ்ரீஸ்ரீங்ள்ள் என்பதைப் பெறுவாயில் என்றுசொல்லலாம்.

குறிப்பிட்ட இணைய தளத்திற்கோ இடத்திற்கோ செல்வதற்கும் பயன்பெறுவதற்கும் அனுமதியோ உரிமையோ பெறும் வாயிலாக இது இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT