தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
தாஅம் தரவாரா நோய். (பாடல்-7)

மாவலி, தன்னோடு பொருந்தியிருக்கும் அமைச்சன் கூறியவற்றை அறியாதவனாய், மூவடி நிலம் கொடுப்பது எனக்கு எளிய செயலாகும் என்று சொல்லி, செருக்கின்கண் மிக்கு, தானமாக நீர்வார்த்துக் கொடுத்து, உலகமெல்லாம் இழந்தான். (ஆதலால்), குற்றமுடைய காரியங்களைத் தொடங்குகின்றவர்களுக்கு, தாமே தமக்குத் தேடவாராத துன்பங்கள் இல. (க-து.) குற்றமுள்ள காரியத்தைச் செய்யத் தொடங்குவார் தாமே தமக்குத் துன்பங்களை விளைவித்துக் கொள்வாராவர். "இல்லையே தா அம் தரவாரா நோய்' என்பது இதில் வந்த பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT