தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

உரைந்தாரை மீதூரர் மீக்கூற்றம் பல்லி
நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப்
பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப!
நரிக்கூஉக் கடற்கெய்தா வாறு. (பாடல்-22)

பல்லியது நெரிக்கப்பட்ட முட்டையைப்போல மலர்ந்திருக்கின்ற நீண்ட பெரிய புன்னை, பொரியைப் போன்ற பூக்களினது இதழ்களைப் பரப்பும் நீர் மிகுந்த கடல் நாடனே! தம்மை நலிய உரைத்தவர்களை, செயலால் மிக் கொழுகாது சொற்களால் தாமும் மிக்கொழுகல், நரியின் கூவிளியால் கடல் ஒலியைத் தாழ்விக்கமாட்டாதவாறு போலும். (க.து.) வீரர்கள் தம்மை நலிய உரைத்தார்களைச் செயலால் அடுதல் வேண்டும். "நரிக் கூஉக் கடற்கெய்தா வாறு' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT