தமிழ்மணி

விக்கிரமன் நினைவு தினக் கட்டுரைப் போட்டி

DIN

கலைமாமணி' விக்கிரமனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை (டிச.1) முன்னிட்டு, "இலக்கியப் பீடம் மற்றும் மாம்பலம் சந்திரசேகர்' இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டிக்குத் தமிழ் ஆர்வலர்களிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 
"கலைமாமணி விக்கிரமன் நினைவு கட்டுரைப் போட்டி'க்குக் கீழ்க்காணும் தலைப்புகளில், பத்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகள் எழுதி அனுப்ப வேண்டும்.

1. புதுக்கவிதையில் மானுடச் சிந்தனைகள்
2. உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு
3. இன்றைய இளைய தலைமுறையினரின் சிந்தனையும் செயல்பாடும்
4. ஆன்மிக மறுமலர்ச்சியில் மகான்கள்

மேற்குறித்த ஒவ்வொரு தலைப்புகளிலும் மூன்று கட்டுரைகள் என, மொத்தம் பன்னிரண்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். மொத்தப் பரிசுத் தொகை ரூ.12,000. ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூ.1000 பரிசு வழங்கப்படும். ஒருவர் ஒரு தலைப்பில் மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்.
கட்டுரைகள் 30.9.2017க்குள் "இலக்கியப்பீடம்' , எண் 3, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33 என்ற முகவரிக்கோ அல்லது, ilakiyapeedam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ (யுனிகோட்) அனுப்பலாம்.
1.12.2017 அன்று கலைமாமணி விக்கிரமனின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியன்று பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT