தமிழ்மணி

எட்டு வழி வாயில் கவிதை

இராம. வேதநாயகம்

எப்பக்கத்தில் தொடங்கிப் படித்தாலும் அச்செய்யுளே எவ்வெட்டெழுத்து உடைய நான்கு அடிகள் உடையதாய், அறுபத்து நான்கு அறைகளிலே முதல் அறை தொடங்கி ஒரு முறையும், இறுதி அறை தொடங்கி ஒரு முறையுமாக இருமுறை எழுதி இயையுமாறு பாடப்படும் செய்யுள், ""சருப்பதோ பத்திரம்'' என்று வழங்கப்படும். இவ்விளக்கம், ""சித்திர கவி விளக்கம்'' என்னும் பரிதிமாற் கலைஞரின் நூலில் அழகுற விளக்கப்பட்டுள்ளது. ""சருப்பதோ பத்திரம்'' என்னும் செய்யுளின் இலக்கணத்தை மாறனலங்காரத்தில் தெள்ளிதின் காணலாம். இவ்விலக்கணத்தில் அமைந்த பரிதிமாற் கலைஞரின் செய்யுள் ஒன்று வருமாறு:

""மாவா நீதா தாநீ வாமா
வாயா வாமே மேவா யாவா
நீவா ராமா மாரா வாநீ
தாமே மாரா ராமா மேதா''

இதன் பொருள்: மாவா - பெருமையை உடையவனே; நீதா - நீதியை உடையவனே; தாநீவா மாவா - வலிமை நீங்காத செல்வம் உடையவனே; யாவாமே மேவா யாவா (மே வாயா வா யா மே) - சேரக் கடவாய் வாயாதனவாக எனவைதாம் ஆகும்?; நீ வா - நீ வருதி; ராமா மாரா - இராமனை ஒப்பவனே, மன்மதனை ஒப்பவனே; ஆ - காமதேனுவை ஒப்பவனே; ஆமா - ஒழுங்குடையவனே; மேதா - நல்லுணர்வு உடையவனே; மே மார் ஆர் - மேன்மை பொருந்திய நின் மார்பில் உள்ள ஆத்தி மாலையை; நீ தா - நீ தருதி. இச்செய்யுளை 64 அறைக் கட்டங்களில் அடைத்துப் பார்ப்போம்:
இச்செய்யுளை எட்டு விதமாகப் படிக்கலாம். 

1. நான்கு நான்கு வரிகளாக முதல் அறையிலிருந்து வலப் பக்கமாக வாசித்தல்.
2. வாசித்தவாறே இறுதியிலிருந்து முதல் வர வாசித்தல்.
3. முதல் அறையிலிருந்து மேலிருந்து கீழாக வாசித்தல்.
4. வாசித்தவாறே கீழிருந்து மேலாக வாசித்தல்.
5. முதல் வரியின் இறுதிக் கட்டத்திலிருந்து மேலிருந்து கீழாகவாசித்தல்.
6. வாசித்தவாறே கீழிருந்து மேலாக வாசித்தல்.
7. இறுதி வரியின் முதல் தொடங்கி இடப் பக்கமாக வாசித்தல்.
8. அப்படியே இறுதியிலிருந்து முதல் வரை வாசித்து முடித்தல்.ஆக, இவ்வாறு எட்டுவிதமாக எந்தப் பக்கம் வாசித்தாலும் பாடல் சரியாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT