தமிழ்மணி

 எளியார் பகை கொள்ளற்க

தினமணி

பழமொழி நானூறு
வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயோர்
 புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே
 கண்பாட்ட பூங்காவிக் கானலந் தண்சேர்ப்ப!
 வெண்பாட்டம் வெள்ளந் தரும். (பா-71)
 கண்களின் தகைமையாயுள்ள அழகிய நீலப்பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடல் நாடனே! பருவ மழையன்றி வேனிற்காலத்து வெண்மழையும் மிகுந்த நீரைத் தருமாதலால், மேலானவர்கள் வலிய தகைமை உடையாரோடு மாறுபாடு கொள்ளினும்; எளிய தகைமை உடையாரோடு பகைகொள்ளுதலால் ஒரு பயனும் இன்று. (க-து.) அரசன் வலியுடையாரோடு பகை கொள்வானாயினும் அஃதில்லாரோடு கொள்ளற்க என்றது இது. "வெண்பாட்டம் வெள்ளந் தரும்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT