தமிழ்மணி

ஊழே பெரிது!

தினமணி

பழமொழி நானூறு
 எவ்வந் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
 தெய்வம் முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு
 பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும்
 கோப்புக் குழிச்செய்வ தில். (பாடல்-63)
 பூவின்கண் புகுந்து வண்டுகள் ஒலிக்கின்ற வயல் நாடனே! (எந்நாட்டின்கண்ணும் தடையின்றிச் செல்லவல்ல ஆணையையுடைய) பேரரசன் (போர் செய்யப்) புகுந்த இடத்து, குறுநிலத்தை ஆளுமரசன் எதிர்த்துச் செய்வது ஒன்றுமில்லை (அவன் ஆளுகையின் கீழ் அடங்கியிருப்பான்); (அதுபோல) துன்பமே துணையாக, தான் கருதிய பொருளை முடித்தற்குரிய முயற்சி, இழவூழே (எதிர்த்து நின்று முடியாதவாறு) முடிக்கின்றவிடத்து, முயற்சி அதனை எதிர்த்து வலிந்து என்ன செய்ய முடியும்? (கீழ்ப்பட்டேயிருத்தல் வேண்டும்.) "குறும்பியங்கும் கோப்புக் குழிச் செய்வ தில்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT