தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


நன்றே ஒருவர்த் துணையுடைமை பாப்பிடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோயும்
குன்றகல் நன்னாட! கூறுங்கால் இல்லையே
ஒன்றுக் குதவாத ஒன்று.    (பாடல்-111)


ஆகாயத்திற் பொருந்தும் குன்றுகள் அகன்ற நல்ல நாடனே! ஒருவர் ஒருவரைத் துணையாகக் கொள்ளுதல் நல்ல தொன்றே.  பாம்பான் வரக்கடவதொரு துன்பத்தை,  பார்ப்பானிடத்துத் துணையாக வந்திருந்தது சிறிய நண்டேயாயினும் (அதனை) நீக்குதலால்,  சொல்லுமிடத்து,  ஒன்றிற்கும் உதவாத ஒரு சிறு பொருளும் இல்லை. (க-து.) துணைபெற்று வழிச்செல்லுதல் நல்லது. "ஒன்றுக் குதவாத ஒன்று இல்லை' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT