தமிழ்மணி

அறிவுடையோர் குற்றம் காணார்

தினமணி

பழமொழி நானூறு
இடையீடுடையார் இவரவரோ டென்று
 தலையாயார் ஆராய்ந்தும் காணார் - கடையாயார்
 முன்னின்று கூறும் குறளை தெரிதலால்
 பின்இன்னா பேதையார் நட்பு (பாடல்-111)
 மேம்பட்ட குணங்களை உடையவர்கள், (தம் நட்டார்மீது சிலர் கோள் கூறின்) கோள் கூறிய இவர்கள் நம் நட்டாரோடு மாறுபாடு உடையவர் என்று நினைத்து, அவர் கூறியனவற்றை ஆராய்ச்சி செய்து குற்றம் காண்பதிலர். கடைப்பட்ட குணங்களை உடைய கீழோர், தம் நட்டார் மேல் பிறர் வந்து கூறும் கோள்களை ஆராய்ச்சி செய்து அவர் குற்றங்களைக் காண்டலின், அறிவிலாரோடு கொண்ட நட்பு பின்னர் இன்னாததாக முடியும். "பின் இன்னா பேதையார் நட்பு' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT