தமிழ்மணி

பழமொழி நானூறு

தினமணி

எல்லா நாளும் நல்ல நாளே!
 இதுமன்னுந் தீதென் றிசைந்ததூஉம் ஆவார்க்கு
 அதுமன்னும் நல்லதே யாகும் - மதுமன்னும்
 வீநாறு கானல் விரிதிரைத் தண்சேர்ப்ப!
 தீநாள் திருவுடையார்க் கில். (பா-84)
 தேன் ஒழுகுகின்ற குவளைப்பூக்கள் மணம் வீசுகின்ற கடற்சோலையையுடைய, விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே! இவ்வினை இவர்க்குத் தீங்கினை நிலை நிறுத்துவதாம் என்று கருதப்பட்டுப் பொருந்தியதும், செல்வம் உடையராவார்க்கு (பொருளை ஈட்டுவார்க்கு) அவ்வினை (ஊழால்) நல்லதாகவே முடியும். (ஆதலால்), தீய நாள்கள் முன்செய்த நல்வினை உடையார்க்கு உண்டாதலில்லை. (க-து.) ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும். "தீநாள் திருவுடையார்க் கில்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT