தமிழ்மணி

 பகைவரை நட்பாக்க வேண்டா

பழமொழி நானூறு
 தழங்குகுரல் வானத்துத் தண்பெயல் பெற்றால்
 கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால்
 விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா பழம்பகை நட்பாதல் இல். (பா-97)
 முழங்கும் முழக்கத்தையுடைய மேகத்தின்கண் உள்ள குளிர்ந்த நீரைப் பெற்றால், கிழங்குடைய புல் முதலியவெல்லாம், முளையா நிற்கும். விழைந்து சமயம் வாய்த்தபொழுது முரண்கொண்டு நிமிர்ந்து நிற்கும்வரை பகைவருக்குத் துணையாய் நிற்றலை ஒழியும் பொருட்டு விரும்பி, அவர்களை அடியோடு நெருங்கிய நட்புடையவர்களாகக் கொண்டொழுதல் வேண்டா. பழைமையாகப் பகையாயினார் நட்பாக ஒன்றுதல் இல்லையாதலால்.
 "பழம்பகை நட்பாதல் இல்' என்பது பழமொழி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT