முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மை தீற்றப்பெற்று அமர்த்திருக்கும் கண்களையும், மாட்சிமை உடைய அணிகளையும் உடையவளே!

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க்கு என்கொலோ?
மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர் 
கையுண்டும் கூறுவர் மெய். (பாடல்-241)

மை தீற்றப்பெற்று அமர்த்திருக்கும் கண்களையும், மாட்சிமை உடைய அணிகளையும் உடையவளே! அடர்ந்து எழுந்த போர்க்களத்தினிடத்தே பகைவர்களின் வாயினின்றும் வெளியான பொய்யான உரைகளைக் கேட்டு அதனால் கீழறுக்கப்பட்டுத் திரிபவர்களுக்கு என்னதான் வீரமோ? அறிவு நிறைந்தவர்கள், பிறர் கைப்பொருளை உண்டவரானாலும்கூட, எப்போதும் உண்மையையே பேசுவார்கள். 

"சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்' என்பது பழமொழி.

முழு கட்டுரையைப் படிக்க →