பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
பாறைக் கல்லிலே அருவிகள் வீழ்ந்து ஒலி முழங்கிக் கொண்டிருக்கின்ற அழகிய மலைநாடனே! கற்க வேண்டிய நூல்களைக் கற்று அறிவுடையவரானவர்கள் கண்ட அடக்கமே உண்மையான அடக்கமாகும்.
கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்-தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல். (243)
பாறைக் கல்லிலே அருவிகள் வீழ்ந்து ஒலி முழங்கிக் கொண்டிருக்கின்ற அழகிய மலைநாடனே! கற்க வேண்டிய நூல்களைக் கற்று அறிவுடையவரானவர்கள் கண்ட அடக்கமே உண்மையான அடக்கமாகும். கற்று அறியாதவர்களோ, தங்களுடைய அறியாமையான தன்மையை மறந்துவிட்டுத் தம்மைப் புகழ்ந்து தெளிவாகப் பேசிக் கொண்டிருப்பர். நீர் நிறைந்த குடம் தளும்புவதில்லை; குறை குடமே என்றும் தளும்பும் அல்லவா!