தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையும்
எம்தீமை என்றே உணர்வதாம்-அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
ஒருவர் பொபைஇருவர் நட்பு. (பாடல்-247)

கரையோடு பொருதலான அலைகள் வந்து உலவுகின்ற பொங்கும் நீர்வளத்தினை உடைய சேர்ப்பனே! ஒருவர் பொறுக்கும் பொறுமையானது இருவரின் நட்புக்கும் உதவியாகும். நட்பு செய்தவர்களுக்குத் தம்மால் செய்யப்பட்டதொரு தீமை எதுவும் இல்லாதவர்கள், தமக்கு நண்பர்கள் செய்யும் தீமையையும், "எம் தீவினைப் பயனால் வந்ததே இது' என்று நினைத்து அதனைப் பாராட்டாது பொறுத்துக் கொள்ளவே செய்வர்.  "ஒருவர் பொறைஇருவர் நட்பு' என்பது பழமொழி.

(திருத்தம்: சென்ற வாரம்  பாடல் எண். 126 எனத் தவறுதலாக வெளியாகிவிட்டது. அப்பாடல் எண் 246 என்பதே சரியானது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT