பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
ஒரு நாயை வளர்ப்பவன், அதை அன்புடன் பேணாமல், கடை வாயிலை அடைத்து வைத்துக் கொண்டு அதை அடித்தானென்றால், அந்த நாயும் தன் சொந்தக்காரனான அவனைக் கடித்துவிடும்.
ஆற்றார் இவர்என்று அடைந்த தமரையும்
தோற்றத்தாம் எள்ளி நலியற்க- போற்றான்
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையாளைக் கவ்வி விடும். (பாடல்-252)
ஒரு நாயை வளர்ப்பவன், அதை அன்புடன் பேணாமல், கடை வாயிலை அடைத்து வைத்துக் கொண்டு அதை அடித்தானென்றால், அந்த நாயும் தன் சொந்தக்காரனான அவனைக் கடித்துவிடும். ஆகவே, தாம் வறுமையுற்று வந்து தம்மைப் புகலாக அடைந்த உறவினரையும், "இவர் நம்மை எதிர்க்க வலியில்லாதவர்' என்று கருதி பிறருக்கு வெளிப்பட இகழ்ந்து பேசி எவரும் அவரை வருந்தாமல் இருக்க வேண்டும்.
"கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்' என்பது பழமொழி.
Advertisement
Advertisement