தமிழ்மணி

நல்வினைகளை தேடுவோம்!

ஆயுள் முடிந்துபோன ஆட்களைத் தேடிக்கொண்டே திரிகின்ற இயல்பினையுடையது அருள் அற்ற கூற்று.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்பார்த்து உழலும் அருளில்கூற்று உண்மையால்

தோட்கோப்புக் காலத்தாற் கொண்டு உய்மின்; பீட்பிதுக்கிப்

பிள்ளையைத் தாயலறக் கோடலான், மற்றதன்

கள்ளங் கடைப்பிடித்தல் நன்று.

(பாடல் 20 அதிகாரம்: இளமை நிலையாமை)

ஆயுள் முடிந்துபோன ஆட்களைத் தேடிக்கொண்டே திரிகின்ற இயல்பினையுடையது அருள் அற்ற கூற்று. அது உண்மையாதலால், நல்வினையாகிய கட்டுச்சோற்று மூட்டையைத் தேடிக்கொள்ளும் காலத்தோடேயே தேடி வைத்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள்.

கருப் பையிலே இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாயானவள் அலறித்துடிக்கப் பிள்ளையைக் கொண்டு போகின்றதனால், அந்தக் கூற்றத்தின் வஞ்சனையை மறவாமல், உறுதியாக அறிந்து தெளிவுகொள்ளுதலே மிகவும் நன்மையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலிசா ஹீலி அதிரடி சதம்: ஆஸி. மகளிரணி ஆறுதல் வெற்றி!

புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை

உதகையில் பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கேபிள் காா் திட்டம்

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

SCROLL FOR NEXT