உறக்குந் துணையதோர் ஆலம்வித்து ஈண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு-அறப்பயனும்
தான்சிறி தாயினும், தக்கார்கைப் பட்டக்கால்,
வான்சிறிதாப் போர்த்து விடும்.
(பாடல் 38 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)
மிகமிகச் சிறு அளவினதாகிய ஓர் ஆலம் விதையானது முளைத்துக் கிளைகள் நெருங்கி, மிகவும் நிழல்தந்து பெரிய மரமாகி விளங்குவது போன்றது தருமத்தின் பயனும்.
அந்த அறப்பயன் தன் செயல் அளவிலே அது செய்யப்பட்டுச் சேர்ந்த காலத்து, வானகமும் சிறியதாகுமாறு எங்கும் கவிந்து, செய்தவனுக்கு மிகுந்த சிறப்பைத் தருவதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.