தமிழ்மணி

தருமம் செய்யுங்கள்! நாலடியார்

அருமையாகவே பெறுதலையுடையது உடல். அந்த உடலினைப் பெற்றதன் பயனாக உயிருக்குப் பெரும் பயனாக விளங்கும் தருமங்களையும் நாம் மிகுதியாகவே தேடிக்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திச் சேவை

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்,

பெரும் பயனும் ஆற்றவே கொள்க!- கரும்பூர்ந்த

சாறுபோற் சாலவும் பின்னுதவி, மற்றதன்

கோதுபோற் போகும் உடம்பு!

(பாடல் 34 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)

அருமையாகவே பெறுதலையுடையது உடல். அந்த உடலினைப் பெற்றதன் பயனாக உயிருக்குப் பெரும் பயனாக விளங்கும் தருமங்களையும் நாம் மிகுதியாகவே தேடிக்கொள்ள வேண்டும்.

கரும்பானது பக்குவமாகத் தன்னை ஆலையிலிட்டு நசுக்கியவர்களுக்கு, தன்னிடத்திற் பொருந்திய சாற்றைக் கொடுத்து இன்புறுத்துவது போலவே, தருமங்களும் உடலை வருந்தித் துறந்தவர்களுக்கு மறுமையிலே சிறந்த இன்பத்தைத் தந்து உதவி செய்யும். இந்த உடலோவென்றால், சாறுபோன கரும்பின் சக்கையைப் போல, உயிர் போனபின் பயனற்றுக் கழித்துப் போடப்படுவதாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.15-இல் முக்கிய முடிவு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கரூர் சம்பவம்: 10 மணிநேரம் நடந்த சிபிஐ விசாரணை!

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா மீண்டும் சாம்பியன்

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையின் சீரான வளர்ச்சியை அரசு உறுதிசெய்யும்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT