தமிழ்மணி

பறை உணர்த்தும் பாடம்

உறவின் முறையார் எல்லாரும் கூட்டமாகக் கூடிக் கொண்டு கலீரென்று பெருங்குரலிலே கூவி அழ, சடலத்தைத் தூக்கிக் கொண்டு போய்ச் சுடுகாட்டிலே சேர்ப்பவர்களைக் கண்டுள்ளோம்.

தினமணி செய்திச் சேவை

கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலறப்

பிணங்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும்,-மணங் கொண்டீண்டு

'உண்டுண்டுண்டு' என்னும் உணர்வினாற் சாற்றுமே

'டொண் டொண் டொண்' என்னும் பறை.

(பாடல் 25 அதிகாரம்: யாக்கை நிலையாமை)

உறவின் முறையார் எல்லாரும் கூட்டமாகக் கூடிக் கொண்டு கலீரென்று பெருங்குரலிலே கூவி அழ, சடலத்தைத் தூக்கிக் கொண்டு போய்ச் சுடுகாட்டிலே சேர்ப்பவர்களைக் கண்டுள்ளோம். அப்படிப் பார்த்திருந்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகத்திலே உறுதியாக இன்பம் உண்டு உண்டு என்று சொல்லும் மயக்கமான அறிவுள்ளவனை என்ன சொல்வது? அவனைக் குறித்து, 'தொண் தொண்' என ஒலிக்கும் சாக்காட்டுப் பறைதான் அவனுக்கு யாக்கையின் நிலையாமையைத் தெரிவிக்கும் போலும்!.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பை பவர்-பிளேயில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பாக்.!

கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: பல்வேறு பொருட்களின் விலையை குறைத்த பதஞ்சலி ஃபுட்ஸ்!

இமைக்காரியே... கௌரி!

நாணமோ... ஷில்பா!

SCROLL FOR NEXT