'சந்தேக' தாமஸ்
இயேசு தாம் போதித்த மறையுண்மைகளை இப்பூவுலக மக்கள் அனைவரும் அறிந்து பயனடைய வேண்டும் என்று எண்ணினார். அதற்காக இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலேயே தன் சீடர்களை நோக்கிப் பின்வருமாறு உபதேசித்தார். ஆம்! "உலகெங்கு
இயேசு தாம் போதித்த மறையுண்மைகளை இப்பூவுலக மக்கள் அனைவரும் அறிந்து பயனடைய வேண்டும் என்று எண்ணினார். அதற்காக இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலேயே தன் சீடர்களை நோக்கிப் பின்வருமாறு உபதேசித்தார். ஆம்! "உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறை சாற்றுங்கள்' என்று அவர்களுக்குக் கூறினார். இந்த அன்புக் கட்டளையை தலைமேல் ஏற்று, வெவ்வேறு நாடுகளுக்கும் சீடர்கள் சென்றனர்; இயேசுவின் போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் புனிதப் பணியை மேற்கொண்டனர். இயேசுவின் அன்புச் சீடர்களில் அவ்வாறு இந்தியாவுக்கு வந்தவர்கள் புனித தோமையாரும், புனித சவேரியாரும் ஆவர். இவர்களுள் புனித தோமையாரின் நினைவு நாள், ஜூலை 3-ம் தேதி (இன்று) ஆகும்.
புனித தோமையார் (தாமஸ்) மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பகைவரால் கொல்லப்பட்டார். அதற்கு முன்னர் அவரது உயிருக்கு ஆபத்து இருந்தபோது அவர் தம் உயிரைக் காத்துக் கொள்வதற்காக மறைந்திருந்த குகையினை நாம் செயின்ட் தாமஸ் மௌண்ட் தேவாலயத்துக்கருகில் இன்றும் காணலாம். அவரது உடலை அடக்கம் செய்த கல்லறையினை சாந்தோம் பேராலய வளாகத்திற்குள் பார்க்கலாம். ஏராளமான பக்தர்கள் சாந்தோம் பேராலயத்தையும், அங்குள்ள புனித தோமையார் கல்லறையினையும் தரிசிக்க வருகை புரிந்த வண்ணம் இருப்பர்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த சில நாட்களுக்குள்ளாகவே தம்முடைய சீடர்களுக்குக் காட்சி தந்தார். அப்போது இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான புனித தோமையார், அங்கு இல்லை. இயேசு தமக்குக் காட்சியளித்த உண்மையை பிற சீடர்கள் அவருக்குக் கூறியபோது தோமையார், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நீங்கள் கூறுவதை நான் நம்பமாட்டேன்' என்று கூறிவிட்டார்.
எட்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சீடர்கள் கூடியிருந்தபோது இயேசு அவர்கள் முன் தோன்றினார். தோமையாரைப் பார்த்து, "இதோ என் கைகள். என் விலாவில் உன் விரலை விடு; ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்' என்று கூறினார். அதன் பிறகே தோமையாரின் சந்தேகம் தீர்ந்தது! அவர் இயேசுதான் என்ற உண்மை புரிந்தது! இதனால்தான் சந்தேகப் பேர்வழிகளை, "ஈர்ன்க்ஷற்ண்ய்ஞ் பட்ர்ம்ஹள்ஆக இராதே' என்று கூறும் பேச்சு வழக்கு வந்தது.
இயேசுவின் பன்னிரு அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தோமையார், இந்தியாவில் -முக்கியமாக தென்னிந்தியாவில் கிறிஸ்துவின் போதனைகள் பரவக் காரணமாயிருந்தவர். அதனாலேயே இவர், "இந்தியாவின் அப்போஸ்தலர்' என்று அழைக்கப்படுகிறார். இவரது பெயரால் எழும்பி நிற்கும் சாந்தோம் பேராலயம், பிரசித்தி பெற்ற கிறிஸ்துவ யாத்திரைத் தலமாக விளங்குகிறது. இந்தப் புனிதரின் பெயர் தாங்கிய பல நிறுவனங்கள், சமூக மற்றும் கல்விப் பணிகளைச் செய்து வருகின்றன. நாமும் இப்புனிதரின் நினைவு நாளில் அவரை வேண்டி, இறையருளை நிறைவாகப் பெறுவோமாக.