முகப்பு
வெள்ளிமணி

இல்லறம் நல்லறம்!

திருடன் ஒருவன் மீது இரக்கப்பட்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்து, தங்க இடம் அளித்தார் ஒருவர். காலையில் எழுந்த திருடன் அங்கிருந்த பொருட்களை எல்லாம் வாரி அள்ளிக்கொண்டு வெளியேறினான். காவலர்கள்

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:26 PM
பகிர்:

திருடன் ஒருவன் மீது இரக்கப்பட்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்து, தங்க இடம் அளித்தார் ஒருவர். காலையில் எழுந்த திருடன் அங்கிருந்த பொருட்களை எல்லாம் வாரி அள்ளிக்கொண்டு வெளியேறினான். காவலர்கள் அவனைப் பிடித்துக்கொண்டு குருவானவர் இல்லத்திற்கு அழைத்து வந்தனர். குருவானவரைக் கண்டவுடன் தனது தவறுக்காக மனம் வருந்தி காலில் விழுந்து மன்னிப்பு கோரினான் அத்திருடன். குருவும் மன்னித்து விட்டார். இவ்வாறாக சாதாரண சராசரி மனிதன் மட்டும் மன்னிப்பு கேட்டதைப் பார்த்தோம். ஆனால் அரசனும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பான் என்பதை மெய்ப்பிக்கிறது திருவிவிலியம்.

 எவ்வாறெனில், தாவீது அரசன் தனது படை வீரரின் மனைவியைத் தன்னுடைய மனைவியாக வைத்துக்கொள்ள, அவளின் கணவனையே கொன்று விட்டான். பின்னர் அத்தவறை உணர்த்துவதற்காக நாத்தான் இறைவாக்கினர் கடவுளால் தாவீது அரசனிடம் அனுப்பப்பட்டார். அவரும் அரசனின் தவறைச் சுட்டிக்காட்டினார். அரசர் தனது தவறுக்கு மனம் வருந்தி, வெதும்பி நாத்தான் இறை வாக்கினரிடம் ""நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்'' என்றார். (2 சாமு 12:13).

 ""பாவத்தில் விழுவது வீழ்ச்சி; விழுந்து எழுவதுதான் எழுச்சி''.

 தவறுவதில் மனிதன் மனித இயல்பை மெய்ப்பிக்கின்றான். ஆனால் மனம் வெதும்பி, மனம் மாறி மன்னிப்பு கேட்கும்போது பரிகாரம் செய்யத் துவங்கும்போது இறை இயல்பை எண்பிக்கிறான் என்பதே உண்மை. ஆகவே, இல்லறமாம் நல்லறத்தில் மனத்தாங்கல், மன வருத்தம், மனக் கஷ்டம், மன சங்கடம், மனக்கசப்பு போன்றவை எழும்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தவறுக்காக மன்னிப்பு கோரல் என்பதை அவ்வப்போது நடைபெறும் அருஞ்செயல்களாக மாற்றினோமெனில் நம் இல்லறமும் நல்லறமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.