முகப்பு
வெள்ளிமணி

கோபாலனுக்கு கும்பாபிஷேகம்!

ஸ்ரீமந் நாராயணன் பல அவதாரங்களை எடுத்தருளினார். அவற்றில் கிருஷ்ணாவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தில் கண்ணபிரான் அருள்தரும் கோயில்கள் ஏராளம் உண்டு. அவற்றில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:47 PM
பகிர்:

ஸ்ரீமந் நாராயணன் பல அவதாரங்களை எடுத்தருளினார். அவற்றில் கிருஷ்ணாவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தில் கண்ணபிரான் அருள்தரும் கோயில்கள் ஏராளம் உண்டு. அவற்றில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் உள்ள எதிர்க்கோட்டை கிராமமும் ஒன்று.

மீன்கள் நிறைந்த கயலாறு என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது எதிர்க்கோட்டை. ஆற்றுக்கு மேற்கே கல்லமனாயக்கன்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இவற்றுக்கு எதிரே கோட்டையுடன் அமைந்திருந்ததால் எதிர்க்கோட்டை என்ற பெயர் ஏற்பட்டது.  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தப்ப நாயக்கர் என்னும் குறுநில மன்னர் இக்கோயிலை எழுப்பினார்.  ஸ்ரீ ருக்மிணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலசுவாமி இங்கே அருள் புரிகிறார். நம்மாழ்வார், விஷ்வக்சேனர், உடையவர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் இங்கே அருட்காட்சி நல்குகின்றனர்.

எதிர்க்கோட்டையில் வசித்த பல குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில், கோயிலுக்கான வருமானமும் பெருமளவில் குறைந்தது. பூஜைகள்கூட நின்றுபோகும் நிலை ஏற்பட்டது. சில அன்பர்களின் பெரு முயற்சியால் "ஸ்ரீ ருக்மிணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலசுவாமி பக்த சபை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் பின் நித்திய பூஜைகளும் ஓரளவுக்கு நடைபெற்று வந்தன.

இந்நிலையில் "ஸ்ரீ ஜப்பான் நாராயணய்யங்கார் சாரிடபிள் அன்ட் சேவா டிரஸ்ட்' என்ற அமைப்பின் மூலம் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி புதிதாத சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது. மேலும் புதியதாக முகப்பு வாசலும், விமானமும் கட்டப்பட்டன. இவை தவிர  மகா மண்டபம், ஆழ்வார்கள் எழுந்தருளியுள்ள அர்த்த மண்டபம், ஸ்ரீவேணுகோபால சுவாமியின் கருவறை ஆகியவையும் புதுப்பிக்கப்பட்டன. கோயில் தளம் முழுதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. புதிதாக ஸ்ரீ ருக்மினி - ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமியின் விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தற்போது யாகசாலை பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 12ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற இருக்கிறது.

பக்தர்கள் தரிசித்து கண்ணனின் அருளைப் பெறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →