வெள்ளிமணி

நலம் கிட்டும் நல்நோன்பு!

மார்கழி - இறை வழிபாட்டுக்குரிய மாதம். மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டதே.

அ.கு. பார்வதி

மார்கழி - இறை வழிபாட்டுக்குரிய மாதம். மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டதே. திருவண்ணாமலை பெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களே திருவெம்பாவை. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் பெருமானைக் குறித்துப் பாடினார் மணிவாசகர்.
 மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் இறுதி மாதம். இப்போதில் தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கொண்ட நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவராம். தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதென்பதால், வைகறையில் பெருமானை தரிசனம் செய்வது சிறப்பு. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை, திருவெம்பாவை நோன்பினால் பெருமை பெறுகிறது. திருவெம்பாவைக்கு சிறப்பாக விளங்குவது எம்பாவாய் என்னும் சொற்றொடர். இல்லங்களில் வாயில்களைத் தூய்மை செய்து அழகிய வண்ணக் கோலமிட்டு, அதில் பசுஞ்சாணத்தைப் பிடித்து வைத்து அதில் பூவை வைப்பது வழக்கம்.
 திருவெம்பாவை விரதம், மார்கழி மாத திருவாதிரைக்கு ஒன்பது நாட்கள் முன் தொடங்கி கடைப்பிடிக்கப்படும் நோன்பு. இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி தூய ஆடை அணிந்து ஆலயம் சென்று சிவகாமி உடனாய நடராஜரைக் கண்டு, வழிபாட்டு பூஜையில் பங்கு பெற வேண்டும். இந்நோன்பின் போது ஒரு நேர உணவாக அவித்த உணவை எடுத்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

SCROLL FOR NEXT