கிறிஸ்துமஸ் என்றாலே கொண்டாட்டம், உற்சாகம், சந்தோஷம்தான். பளிச்சிடும் வண்ண வண்ண விளக்குகள், குழந்தை இயேசுவின் பிறப்பைச் சித்திரிக்கும் விதவிதமான குடில்கள், பரிசுகளைச் சுமந்து வரும் அன்பான தாத்தா, பல வகையான கேக் வரிசைகள், கண்ணைக் கவரும் கிறிஸ்துமஸ் மரங்கள் என்று சிறியவர்களும், பெரியவர்களும் கொண்டாடும் மகிழ்ச்சிப் பெருவிழா கிருஸ்துமஸ்.
கிறிஸ்துமஸ் அலங்கரிப்பில் முக்கிய இடம் வகிப்பது கிறிஸ்துமஸ் குடில். பிரான்ஸிஸ்கன் துறவற சபையை ஏற்படுத்திய "ஐந்து காய பிரான்சிஸ்' என்று அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் அசிசி என்பவர்தான் முதலில் கிறிஸ்துமஸ் குடிலை
அமைத்தது.
789 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1223ஆம் ஆண்டு கிறிஸ்துமஸýக்கு முந்தைய நாள் மாலை இயேசுவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் முயற்சியில் இவர் ஈடுபட்டார்.எனவே இத்தாலி நாட்டில் உள்ள கிறேச்சியோ என்ற ஒரு சிறிய கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். பிரான்சிஸ் அசிசியின் நண்பரான ஜான் வெலிட்டா என்பவருக்கு இக்கிராமத்தின் அருகே சொந்தமாக ஒரு மலைப்பகுதி இருந்தது. இங்குதான் இயேசு பிறந்த மாட்டுத்தொட்டிலை நினைவூட்டும் விதமாக குடில் அமைத்தனர். தீவனத் தொட்டிலில் குழந்தை இயேசுவின் உருவம் கிடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பதினான்காம் நூற்றாண்டில் இந்த இடத்தைச் சுற்றி ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தத் திருத்தலத்திற்கு இத்தாலி, அமெரிக்கா, லத்தீன், ஸ்பெயின், ஜெர்மனி, கனடா மற்றும் கொரியா நாடுகளிலிருந்து பலர் திருப்பயணம் மேற்கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.