முகப்பு
வெள்ளிமணி

உண்மையான அமைதி!

உலகமே இன்று ஏங்கித் தவிப்பது அமைதிக்காகவே. எனவேதான் இயேசு, ""அமைதியை உங்களுக்கு விட்டுச்செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

உலகமே இன்று ஏங்கித் தவிப்பது அமைதிக்காகவே. எனவேதான் இயேசு, ""அமைதியை உங்களுக்கு விட்டுச்செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. "யோவா (14:27)'' என்றார்.

சீடர்களோடு வாழும்போது அவர் வாக்களித்த அந்த அமைதியை, இறந்து உயிர் பெற்று எழுந்தவுடன் அவர்களுக்குத் தோன்றி முதற்கொடையாகக் கொடுத்தார். "அமைதி உங்களில் என்றும் அடைக்கலமாகட்டும்' என்பதுபோல "உங்களுக்கு அமைதி உரித்தாகட்டும்' என்று வாழ்த்தினார். உயிர்த்த இயேசு சொன்ன முதல் வார்த்தையும் இதுவே.

இயேசுவில் அமைதியும், அமைதியில் இயேசுவும் முழுமையாய் கலந்திருப்பதால், இயேசு தான் உலகிற்கு அமைதியை அளிக்க வந்தவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவேதான், அவர் பிறப்பின்போதே ""உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக (லூக் 24:36)'' என வானவர் பாடினர். இயேசுவும் புதிய உயிரோடு, மாட்சி பெற்ற உடலோடு உயிர்ப்பெற்றெழுந்து சீடரை சந்திக்கும்போதெல்லாம் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்றே வாழ்த்தினார்.

இயேசு தரும் அமைதி, உலகம் தருகின்ற போலியான அமைதி போன்றது அல்ல. மாறாக அது உண்மையானது. முழுமையானது. அது ஆயுதங்களாலும், அடக்கு முறையாலும், அதிகாரத்தாலும் வருகின்ற அமைதி அல்ல. அது உண்மையிலும், நீதியிலும், அன்பிலும் பிறப்பெடுக்கும் அமைதி. இந்த அமைதிக்காகத்தான் இன்று உலகம் ஏங்கிக் காத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.