சுந்தரருக்கு செல்வம் மீட்டுத் தந்தவர்!
திருவிளையாடல் நிகழ்த்தும் நோக்கத்துடன் தனது பக்தரான சுந்தரரின் செல்வங்களைக் கொள்ளையிட்டார் சிவபெருமான். அப்போது சுந்தரருக்கு யானையாக வந்து தும்பிக்கையைக் காட்டி சிவபெருமான் சென்ற வழியைப் புலப்படுத்தி
திருவிளையாடல் நிகழ்த்தும் நோக்கத்துடன் தனது பக்தரான சுந்தரரின் செல்வங்களைக் கொள்ளையிட்டார் சிவபெருமான். அப்போது சுந்தரருக்கு யானையாக வந்து தும்பிக்கையைக் காட்டி சிவபெருமான் சென்ற வழியைப் புலப்படுத்தினார். அதன் பிறகு சுந்தரர் திருமுருகன்பூண்டியில் செல்வங்களை மீண்டும் பெற்று சிவபெருமானைப் பாடினார். திருமுருகன் பூண்டி இந்த விநாயகரால்தான் பாடல் பெற்ற தலமானது. இதனால் விநாயகருக்கும் "கூப்பிடு விநாயகர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. திருப்பூர் , திருமுருகன் பூண்டி - அவிநாசி சாலையில் அவிநாசிலிங்கம்பாளையம் அருகே உள்ளது இந்தக் கோயில்.