பதினெட்டுபட்டியின் அம்மன்!
கோவை, பெரியநாயக்கன்பாளையத்திற்கு மேற்கே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ளது மாரியம்மன் கோயில்.
கோவை, பெரியநாயக்கன்பாளையத்திற்கு மேற்கே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ளது மாரியம்மன் கோயில். பெரியநாயக்கன்பாளையம் உருவாவதற்கு முன்பே அதன் தாய் கிராமமாக இருந்தது இந்தக் கூடலூர். இவ்வூருக்கு மேற்கே பாலமலை அடிவாரத்திலிருந்து பெரிய நாயக்கன்பாளையம் வரை உள்ள பதினெட்டுபட்டி கிராம மக்களும் இக்கோயிலை வழிபடுகின்றனர்.
இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்துள்ளன. கோயிலின் முன் மண்டபமும், கர்ப்பகிரகமும் அற்புதமான சுதைகளுடன் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் தெற்குப் புறம் விநாயகர், ஐயப்பன் ஆலயங்களும், கிழக்கே விஷ்ணு, துர்க்கை ஆலயமும், வடக்கே கல்யாண நவகிரக நாயகர்களின் ஆலயமும், மேற்கே
சுப்பிரமணியர் ஆலயமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஜூலை 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகளும், பல்வேறு கிராம பஜனைக் குழுக்களின் பஜனைகளும் நடக்கின்றன.
Advertisement