வெள்ளிமணி

கட்டோவா - பஹுளா தேவி

மேற்கு வங்க மாநிலத்தில், கட்டோவா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பஹுளா தேவி ஆலயம். 51 சக்தி பீடங்களில் 25வதாக விளங்கும் இது,

அ.கு. பார்வதி

மேற்கு வங்க மாநிலத்தில், கட்டோவா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பஹுளா தேவி ஆலயம். 51 சக்தி பீடங்களில் 25வதாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் இடது அக்குள் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கே அன்னை, பஹுளா தேவி என்ற திருநாமத்துடனும், கால பைரவர் பூருகா என்ற திருநாமத்துடனும் எழுந்தருள்கின்றனர்.

பழங்காலத்தில் தேவகோட்டம் எனும் பெயர் பெற்ற இந்த சக்தி பீடம், பிற்காலத்தில் கேதுகிராமம் என்றானது. ஹெüராவிலிருந்து 144 கி.மீ. தொலைவில் உள்ள கடோவா ரயில் நிலையத்தில் இறங்கினால் கேது கிராமத்தை எளிதாக அடையலாம். கேது கிராமத்தில் காணப்படும் சிறப்பு வாய்ந்த கோயில்களில் பஹுளா தேவியின் கோயிலும் ஒன்று. இங்கே பிண்டி எனப்படும் ஒழுங்கமைவற்ற ஒரு கல்லையே தேவி ரூபமாக பாவித்து வணங்குகின்றனர். புராணங்களில் அன்னை பஹுளா என்று அழைக்கப்பட்டாலும் சண்டா (சண்டிகா) என்றுதான் இங்குள்ளவர்கள் அழைக்கின்றனர். கலிகாலத்தில் உடனடி பலன் தரும் தெய்வம் சண்டிகா தேவி.

இவளைப் பற்றிய புராணக் கதை ஒன்று உண்டு. ஒருமுறை படைக்கும் தொழிலைத் துவக்கிய பிரம்மதேவர், படைக்கப்பட்ட ஆணுக்கு ஏற்ற துணையாக பெண் இருக்க வேண்டும் என எண்ணினார். ஆனால், படைப்புக்குரிய மூலப் பொருள்கள் தீர்ந்ததால், செய்வதறியாது குழம்பினார். அப்போது அவருக்குத் தோன்றிய யோசனையின்படி, முன்பே படைக்கப்பட்ட பொருள்களில் இருந்து மேன்மையானவற்றைத் தொகுத்தார். பூவின் மென்மை, கொடியின் லாகவம், மேகத்தின் கண்ணீர், சந்திரனின் குளிர்ச்சி, புலியின் ஆக்ரோஷம் ஆகியன கலந்து அழகிய உருவம் படைத்தார். அந்தப் பெண் சமஷ்டி ரூபிணியாகத் திகழ்ந்தாள்.

இதுபோல், பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றிய சிவப்பு நிற ஒளி, விஷ்ணு முகத்திலிருந்து தோன்றிய கறுப்பு நிற தேஜஸ், சிவனிடம் இருந்து தோன்றிய வெளுப்பு நிற தேஜஸ் என மூன்றும் கலந்த தேஜஸ்ஸில் இருந்து அம்பிகை தோன்றினாள். அவளே ஸ்ரீசண்டிகாதேவி.

தேவி உபாசனையில் முக்கியமானது அவளுடைய சமஷ்டித் தன்மையைப் பற்றிய தத்துவப் புரிதல். தனித்தனியாக விளங்குவது வியஷ்டி, தனியானவை எல்லாமும் ஒன்றாகச் சேர்ந்து விளங்குவது சமஷ்டி. இத்தகு சக்தி மிகுந்த சண்டிகா என்ற பஹுளாதேவி கோயில் கொண்ட இந்தத் தலம், பக்தர்கள் கேட்கும் வரத்தை அருளும் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

SCROLL FOR NEXT