வெள்ளிமணி

காஞ்சி காளி

தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தொண்டை மண்டலத்தில் சிறப்பாகத் திகழும் காஞ்சிபுரத்தில் உள்ளது இந்த சக்தி பீடம்.

அ.கு. பார்வதி

தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தொண்டை மண்டலத்தில் சிறப்பாகத் திகழும் காஞ்சிபுரத்தில் உள்ளது இந்த சக்தி பீடம். 30 வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் இடுப்பு எலும்பு விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கே வீற்றிருக்கும் அன்னையின் திருப்பெயர் தேவகர்பா. இந்தத் தலத்தின் úக்ஷத்ரபாலகர் குரு (கங்காளர்) எனப்படுகிறார்.

காஞ்சியில் திருவேகம்பத்துக்கும் காமகோட்டத்துக்கும் இடையில் காளி கோயில் உள்ளது. காளி கோட்டத்தில் எழுந்தருளியுள்ள இந்த அன்னை ஆதிகாமாட்சி (ஸ்ரீகாளிகாம்பாள்) என்று அழைக்கப்படுகிறாள்.

முன்னொரு காலத்தில் பந்தகாசுரன், பண்டாசுரன் ஆகிய அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்களின் கொடுமையான செயல்களால் மனம் வருந்திய தேவர்கள் திருக்கயிலையை அடைந்து அன்னை பராசக்தியிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த அன்னை காஞ்சியை அடைந்தாள்.

காஞ்சியில் அன்னை கம்பாநதிக் கரையில் மணலால் ஓர் அழகிய லிங்கத்தினை நிறுவி, ஏகாம்பரநாதரை வழிபட்டாள். அன்னையின் உறுதியை சோதிக்க இறைவன் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார்.

வெள்ளத்தில் தான் பிடித்து வைத்த லிங்கத்துக்கு தீங்கு நேருமோ என்று கவலை அடைந்த உமையன்னை, தன் முழங்கால் ஊன்றி, இரு கரங்களாலும் லிங்கத்தை மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டாள்.

இதனைக் கண்டு மகிழ்ந்த மகேசன், அவள் விரும்பிய வரம் கேட்கப் பணித்தார். அன்னையோ, பந்தகாசுரன், பண்டாசுரனை அழிக்க வரமருள வேண்டினாள். இறைவனும் அவ்வாறே வரமளித்தார்.

பின்னர், அம்பிகை காளியின் வடிவத்தை எடுத்து பந்தகாசுரன், பண்டாசுரனை சம்ஹாரம் செய்தாள். மகிழ்ச்சியடைந்த தேவர்கள் அன்னையை காஞ்சியிலேயே கோயில்கொள்ளும்படி வேண்டினர். அதன்படி அன்னை காஞ்சியிலேயே கோயில்கொண்டாள்.

வரலாற்றுச் சிறப்புகள் பல கொண்ட காஞ்சியில்தான் அன்னையின் இடும்பெலும்பு விழுந்து சக்தி பீடமானதாம். இங்கே அன்னையை வேண்டித் தொழுதால் தடைபட்ட திருமணம் நடக்கும், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

SCROLL FOR NEXT