வெள்ளிமணி

தலை சிறந்த இன்பம்

திருமணம் என்பது குடும்ப வாழ்வின் அடித்தளம். திருமணம், திருந்திய வாழ்விற்கு வழிவகுப்பது. திருமணம் இல்லறத்தை நல்லறமாக்கி, இனிய குழந்தைகளை ஈன்று சமூகத்தில் மதிப்போடும் மரியாதையோடும் வாழ வைக்கிறது. இத்தகைய வாழ்வில் நலம் பயக்கும் சமய, நாட்டு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

மு. அ. அபுல் அமீன்

திருமணம் என்பது குடும்ப வாழ்வின் அடித்தளம். திருமணம், திருந்திய வாழ்விற்கு வழிவகுப்பது. திருமணம் இல்லறத்தை நல்லறமாக்கி, இனிய குழந்தைகளை ஈன்று சமூகத்தில் மதிப்போடும் மரியாதையோடும் வாழ வைக்கிறது. இத்தகைய வாழ்வில் நலம் பயக்கும் சமய, நாட்டு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இஸ்லாம், திருமணம் செய்து வாழ்வதே தவறில்லாத தரமான வாழ்வு என்று கூறுகிறது. "நீங்கள் தவறாது வாழ்வதற்கு தக்க வழி திருமணம் புரிந்து மனைவியருடன் வாழ்வது'' என்று குர்ஆனின் 4-3வது வசனம் கூறுகிறது.

"திருமணத்திற்கு முன் நிச்சயிக்கப்படும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்து அறிவது அவர்களிடையே நட்பையும் இணக்கத்தையும் ஏற்படுத்தும்'' என்று ஏந்தல் நபி(ஸல்)அவர்கள் ஏவியதை எடுத்துரைப்பவர் - முகீரா (ரலி). நூல் - திர்மிதீ, நஸஈ.

ஒரு பெண்ணை அவளின் ஒப்புதலின்றி பலவந்தமாக மணம் முடிப்பதை குர் ஆனின் 4-19வது வசனம் தடுக்கிறது.

ரகசிய திருமணங்கள் ரசனையின்றி விரசமாய் விவகாரத்தில் முடிவதை செய்தி ஏடுகளில் படிக்கிறோம். ஊடகங்களில் பார்க்கிறோம். அதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள், ""திருமணம் பலர் அறிய தொழும் பள்ளி வாசல்களில் நடத்தப்பட வேண்டும்'' என்றார்கள். அறிவிப்பவர் - அன்னை ஆயிஷா (ரலி). நூல் - திர்மிதீ.

பலர் அறிய நடக்கும் திருமணத்தில் மணமக்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்கிறது. மண விலக்கை சமூகம் தடுக்கும்.

திருமணம் செய்துகொள்ளும் முன் ஓர் ஆண் குடும்பம் நடத்த போதிய வருவாயைத் தேடிக் கொள்ள வேண்டும். வருமானம் இல்லாதவர் வருவாய் ஈட்டும் வரை பொறுத்திருக்க வேண்டும். இதையே இறைமறை குர்ஆனின் 4-25 வது வசனம், ""ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்த சக்தியுடையவரே திருமணம் செய்துகொள்ள வேண்டும். அந்த சக்தி இல்லாதவர் பொறுத்திருப்பது நன்று'' என்று எச்சரிக்கிறது.

"உலகம் இன்பமானது. அதில் தலை சிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றது முஸ்லிம் நூலில் உள்ளது. மனைவியுடன் தன்மையாக நடந்துகொண்டால் உண்மையிலேயே உயரிய மகிழ்ச்சி இல்லத்தில் கிடைக்கும்.

திருமணம் இல்லாத இருண்ட வாழ்வைத் தவிர்க்க, நபி (ஸல்) புகன்ற பொன்மொழிகள் இவை.

"அந்நிய பெண்ணுடன் ஆண் தனித்திருப்பது கூடாது'' அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ் (ரலி). நூல் - புகாரி, முஸ்லிம்.

பெருமானார் பெண்களுக்கிடையே ஆண்கள் நடந்துசெல்வதையும் தடுத்தார்கள்.

"எதிர்பாரா வண்ணம் ஒரு பெண்ணின் மீது பார்வை பட்டால் மீண்டும் அவளைப் பார்ப்பது கூடாது'' - அறிவிப்பவர்- புரைதா (ரலி), நூல் - அபூதாவூத், திர்மிதீ.

இந்த எச்சரிக்கைகள் இன்று பரவலாக, பரபரப்பாக பேசப்படும் பாலியல் பலாத்காரங்களையும் தடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT