ஆலய அதிசயங்கள்
புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் உள்ளது பேரையூர். இங்கு நாகநாதர் கோயிலுக்குள் சிறிய சுனை உள்ளது.
• புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் உள்ளது பேரையூர். இங்கு நாகநாதர் கோயிலுக்குள் சிறிய சுனை உள்ளது. மகப்பேறு இல்லாதவர்கள், நாகம் சிலை வடித்து வைப்பதாக வேண்டினால் பலன் கிடைக்கிறதாம். "மகப்பேறு வழங்கும் நாகநாதர்' என்று மூலவரை அழைக்கிறார்கள்.
• சென்னை - திருப்பதி போகும் வழியில் ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தில் வேதநாராயணப் பெருமாள் தலையில் இருந்து இடுப்பு வரை மனித உருவமும், கீழே மீன் வடிவமும் கொண்டு காட்சியளிக்கிறார்.
• சிவாலயங்களில் துர்க்கை வடக்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். திருவாரூர் ஆந்தக்குடி சோமேஸ்வரர் ஆலயத்திலுள்ள துர்க்கை அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.
Advertisement
• நவகிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில், நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அபூர்வத்தை திருவாரூர், தியாகராஜர் ஆலயத்தில் காணலாம்.
• புதுக்கோட்டை மாவட்டத்தில் அருள்புரியும் தேனுகந்தநாதருக்கு தினமும் தேனடையிலிருந்து தேன் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறெங்கும் இதுபோன்று நடைபெறுவதில்லை.