"கடவுள்தான் எல்லா இடத்திலும் இருக்கிறாரே, பின் ஏன் கோயிலுக்குப் போய் வழிபடவேண்டும்?'' என்று ஒருவர் கேட்டார். கேள்வி நியாயமானதுதான் என்றாலும், கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்புக்குறியது என்று கருதிய பரமஹம்சர் பின்வருமாறு மொழிந்தார்:
"கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். ஆனாலும் புனிதத் தலமான கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்புக்கு உரியது. ஒரு பசு இருக்கின்றது. பால் என்பது பசுவின் உடம்பு முழுவதிலும் வியாபித்துக் கிடக்கிறது. பசுவின் கொம்பு, காது, வால் போன்ற இடங்களைத் தொட்டால் நமக்குப் பால் கிடைக்குமா? பசுவின் மடியைத் தொட்டு மடியின் வழியேதான் பால் கறக்க முடியும்! கடவுளைக் கோயில் என்ற புனிதத் தலங்களின் வழியே வழிபடுவதுதான் சிறப்பானது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.