முகப்பு
வெள்ளிமணி

சங்கின் பெருமை!

சங்கின் அம்சமாக அவதரித்த ஆழ்வார் பொய்கையாழ்வார்.  திருவீழிமிழலையில் பெருமாள் சக்கரம் இல்லாது சங்கு மட்டுமே ஏந்திக் காட்சியளிக்கிறார். 

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சங்கின் அம்சமாக அவதரித்த ஆழ்வார் பொய்கையாழ்வார்.  திருவீழிமிழலையில் பெருமாள் சக்கரம் இல்லாது சங்கு மட்டுமே ஏந்திக் காட்சியளிக்கிறார்.  காட்டுப்புத்தூர் வேங்கடரமணர் ஆலயத்தில் மூலவரின் சிரசுக்கு மேல் சங்கு காணப்படுகிறது.  திருவெள்ளியங்குடியில் கருடாழ்வார் கையில் சங்கு காணப்படுகிறது. அனந்த மங்கலத்தில் ஆஞ்சநேயர் சங்கு ஏந்தி அபயம் அளிக்கிறார்.  புள்ளம் பூதக்குடியில் ஸ்ரீ ராமரின் வடிவில் சங்கு காணப்படுவது அதிசயமாகும். விநாயகரில் வீர கணபதி மற்றும் விக்ன கணபதி வடிவங்கள் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளன.  அரிசிற்கரைப் புத்தூரில் முருகப்பெருமான் சங்கு, சக்கரம் ஏந்திக் காட்சி தருகிறார்.  காஞ்சிபுரத்தில் சங்குபாணி விநாயகர் திருக்கரத்தில் சங்கு அமைந்துள்ளது.  திருக்கோவிலூரில் பெருமாளின் வலது கையில் காணப்பட வேண்டிய சங்கு இடம் மாறி இடது கையில் காணப்படுகிறது.  பூரி ஜகந்நாதர் ஆலய கர்ப்பக்கிரகம் சங்கு வடிவில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.