வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

DIN

* நல்லவர்கள் தர்மத்திலிருந்து தவறமாட்டார்கள், கவலைப்படமாட்டார்கள், அழியமாட்டார்கள். நல்லவர்களின் தொடர்பு ஒருபோதும் வீணாகாது. நல்லவர்களிடம் பயம் கிடையாது. நல்லவர்கள் சத்தியத்தால் சூரியனை இயக்குகிறார்கள்; பூமியை நிலைத்து நிற்க வைக்கிறார்கள். நல்லவர்கள் இடையே நல்லவர்கள் கஷ்டப்படுவதில்லை;  இது பெரியோர்கள் சொல்லும் சாசுவதமான நெறியாகும்.
- மகாபாரதம்

* நீண்ட காலம் இடைவிடாமல் ஏற்பட்ட ஆன்மிக சாதனைகளுடன் தொடர்ந்து பயிற்சி (அப்பியாசம்)  நிகழுமானால், அது உறுதியாகி விரும்பிய பலனைத் தரும்.
- யோக சூத்திரம்

* பக்தன் உலகியல் இழப்பைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவன் தன்னையும், தன்னுடைய எல்லாச் செயல்களையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டான். ஆனால் பக்தியில் சித்தி (பூரணத்துவம்) ஏற்படாத வரையில், உலக விவகாரங்களைத் துறந்துவிடக் கூடாது; கர்மாக்களின் பயனைத் துறந்து (நிஷ்காம உணர்வுடன்) பூரண பக்திக்கான ஆன்மிக சாதனைகளைச் செய்ய வேண்டும்.

* பக்தி என்பது இறைவனிடம் ஏற்படும் உன்னதமான பிரேமை வடிவமாகும்.
- நாரத பக்திசூத்திரம்

* யாசகம் கேட்பவன், சரணாகதியடைந்தவன் ஆகியவர்களின்  விருப்பத்துக்கு பங்கம் ஏற்படாமல் நடந்துகொள்பவனே, இந்த உலகில் உள்ள மனிதர்களில் சிறந்தவன். அவனே சத்புருஷர்களின் விரதத்தை நிறைவேற்றி வைத்தவன்.
- பஞ்சதந்திரம்

* உடலைப் பாதுகாப்பதில் அளவுக்கும் மீறி பற்றுடைய ஒருவன் ஆத்மாவைக் காண ஆசைப்படுவது, முதலையைத் தெப்பக்கட்டை என்ற புத்தியால் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடப்பதற்குச் சமமாகும்.    

* வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும், பாவமற்றவரும், ஆசை வழியில் அழியாதவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், பிரம்மஞானிகளில் சிறந்தவரும், விறகில்லாத நெருப்புப்போல் அமைதியாக இருப்பவரும், கடல்போல் கருணையுள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ, அவரே சிறந்த குரு ஆவார்.
 - விவேகசூடாமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT