வெள்ளிமணி

பணியாளர்களும் பாசமிகு நேசர்களே

மு. அ. அபுல் அமீன்

தொழில் புரட்சியால் தோன்றிய தொழிற்சாலைகளில் தொழிற்சாலை தோன்றிய பகுதிகளில் பிறரைத் தொழுதறியாது உழுது உண்டு உயர்வாய் வாழ்ந்த பழங்குடி மக்களை அடிமைகளாக ஆக்கி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி தேய்ந்து மாயும்வரை வேலை செய்ய வைத்து கோலூன்றி கொழுத்த கோடீஸ்வர முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி தொழிலாளர் உரிமை பெற உயிர் நீத்த உத்தம தொழிலாளர்களை நித்தமும் நினைவில் நிறுத்தி பெற்ற உரிமைகளை உலகமய ஏகபோக
முதலாளிகள் பறித்திடாது காக்க தொழிலாளர்கள் உறுதி ஏற்கும் ஏற்புடைய நாளே மே முதல் நாளாம் 
தொழிலாளர் நாள்.
ஜக்கரியா நபி ஒரு சுவரைக் கட்டி கொண்டு இருந்தார்கள். பகல் உணவு வந்தது. சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் நபி அவர்களைப் பார்க்க சிலர் வந்தனர். வந்தவர்கள்
கேட்குமுன்னரே ஜக்கரியா நபி கூலி வேலை செய்வதாகவும் கூலிக்கு வந்த உணவை உண்டு முடித்ததால் பகிர்ந்து கொள்ள இயலாததையும் இயம்பினார்கள். உழைத்து உண்டு உழைத்து பிழைக்க வழி காட்டினார்கள் ஜக்கரியா நபி அவர்கள்.
கையிலிருந்த சாட்டை கை நழுவி கீழே விழுந்தால் அதைக் குனிந்து எடுப்பது கௌரவ குறைவு என்று எண்ணி இறுமாந்திருந்த அரபி நாட்டவரை உழைத்து உண்ணவைத்து உழைப்பின் பெருமையை உணர வைத்தார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். கூலிக்கு ஒருவரை அமர்ந்து அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பவனுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் அறிவிப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எண்ணத்தில் பதித்ததைப் பகர்கிறார்
அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு வந்த மா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியை
அறிவிப்பவர் - அபூஹுரைரா (ரலி)நூல் - முஸ்ஸிம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையால் எந்த பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்தது இல்லை என்று
இயம்புகிறார் ஆயிஷா (ரலி) நூல்- முஸ்லிம்.
திருக்கையில் மாவரைப்பது வீட்டைக் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்துவது துணிகளைத் துவைப்பது தோல் பையில் நீர் கொணர்வது முதலிய வேலைகளை பாச நபி (ஸல்)
அவர்களின் நேச மகள் பாத்திமா (ரலி) பணிப்பெண்ணுடன் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பணி பெண்ணை மட்டும் வேலை வாங்காது அவர்களும் அதே வேலையை
முறை வைத்து செய்வார்கள். தோல் பையின் கனத்தால் பாத்திமா (ரலி) அவர்களின் உடம்பில் தழும்பு ஏற்படும்.
பாத்திமா (ரலி) அவர்கள் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வரும்பொழுது பணி பெண்ணுக்குத் தனியாக ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார்கள். பணிபெண்ணின்
வேலையில் தவறு கண்டால் பணியாளைச் சுடுசொற்களால் கடுஞ்சொற்களால் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டர்கள். வேலையை விளக்கிச் சொல்லி துலக்கமாய்
செய்யத் தூண்டுவார்கள்.
கிழிந்த ஆடைகளைத் தைப்பது முதுமையான மாமியாருக்கு உதவி செய்வது தணியாத அன்புடன் கணவருக்குப் பணிவிடை புரிவது முதலிட வேலைகளைப் பாத்திமா (ரலி)
அவர்கள் மட்டுமே செய்வார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்க மாட்டார்கள். அவர்களை நாடிவரும் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பார்கள். நீதி
போதனை செய்வார்கள்.
அக்காலத்தில் அரபியாவில் பலர் எழுத்துத் தொழிலை விரும்பிச் செய்தார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் என்பவரைச் சந்தித்த இமாம் அஹ்மது பின் ஹன்பல், "" நீங்கள்
என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் - எழுதிக் கொண்டிருக்கிறேன் பெரியோர்களின் பேருரைகளை எழுத்தோவியங்களை எடுத்து எழுதி
நகல் எடுக்கிறேன். இது என் தொழில். அஹ்மத் பின் ஹன்பல் -தூய தொழில் தூய வருவாய். நான் தொழில் செய்ய நாடினால் இத்தொழிலையே மேற்கொள்வேன். ""
எடுத்து எழுதும் பொழுது நீங்கள் நடு நிலையில் நின்று உள்ளது உள்ளபடியே எழுத வேண்டும். கூட்டல் குறைத்தல் கூடாது. இந்த உள்ள உறுதியோடு எழுத வேண்டும்''.
இப்படித்தான் பணியாளரைப் பாராட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த 
உரையாடல்.
அப்பாசிய கலீபா மன்சூரின் அரசவையில் செவ்வனே செயலாற்றிய ஓர் ஊழியர் ஒட்டுபோட்ட சட்டை அணிந்து இருப்பதைக் கண்ட அரசர் நல்லாடை அணியாத
காரணத்தைக் கேட்டார். அந்த ஊழியரின் இறந்த தந்தை பாக்கி வைத்த கடனை அடைப்பதாகவும் தந்தையின் இரண்டாவது மனைவியான சிற்றன்னையையும்
சிற்றன்னையின் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் ஊதியத்தின் பெரும்பகுதி செலவாகி விடுகிறது. அதனால் அந்த ஊழியர் சொந்தச் செலவைச் சுருக்கிக்கொள்வதை அறிந்த
அரசர் அந்த ஊழியருக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்கி உழைப்பிற்கு உயர்வான மதிப்பளித்தார். 
அலாவுத்தீனின் மகன் ஷம்ஸ் தப்ரேஸ் பெரிய அறிஞர். ரோமில் அவரிடம் பல அறிஞர்கள் சீடர்களாக இருந்து சீரான கல்வி கற்றனர். ஷம்ஸ் தப்ரேஸ் மாணவர்களிடம்
எவ்வூதியமும் பெறவில்லை. அவர்கள் இடையணி தயாரித்து விற்று வாழ்ந்தார்கள்.
அல்லாஹ்வின் கட்டளைப்படி கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் பணியாளர்களைப் பாசத்தோடு நேசித்து போஷித்து போற்றி தொழிலாளி உயர 
உற்றுழி உதவுவோம். உலகம் உய்யும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT