முகப்பு
வெள்ளிமணி

சகல தோஷம் போக்கும் 24 கருட சேவையும் 15 நவநீத சேவையும்!

திருமால் சயனம் கொள்வது பாம்பின் மீது. பறந்து செல்வது கருடன் மீது. கருடன் பார்வை பட்டால் அனைத்துவகை தோஷங்களும் பறந்தோடி விடும்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:11 PM
பகிர்:

திருமால் சயனம் கொள்வது பாம்பின் மீது. பறந்து செல்வது கருடன் மீது. கருடன் பார்வை பட்டால் அனைத்துவகை தோஷங்களும் பறந்தோடி விடும். அதே போன்று கருடனில் சேவை தரும் திருமாலை தரிசித்தால் அனைத்து தோஷங்களும் விலகி, அனைத்து நலன்களும் கிடைக்கும். அதனால் பக்தர்கள் திருமாலை மற்ற எல்லா விதமான வாகனங்களில் தரிசிப்பதைக் காட்டிலும் கருட சேவையில் தரிசிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுவர்.

ருநாங்கூர் 11 கருடசேவை, குடந்தை 12 கருடசேவை, ஆழ்வார் திருநகரியில் நவதிருப்பதிகளின் 9 கருடசேவை ஆகியவை நடைபெறுகின்றன. இதேபோன்று தஞ்சாவூர் திவ்ய தேசத்தில் 24 கருட சேவை அணிவகுப்பு தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. 

தஞ்சையில் நடைபெறும் 24 கருடசேவையை தரிசித்தால் நான்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்! அதனால் தஞ்சை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக வந்து தரிசனம் செய்து வரும் இந்த 24 கருட சேவை தஞ்சை மாநகரில் எதிர் வரும், 04-06-2018 திங்கட்கிழமை அன்று நடைபெறுகிறது. கருடசேவை தரிசனம் சகல தோஷ நிவர்த்தி தரும்.

தஞ்சை மற்றும் அதன் புற, உப நகரில் உள்ள 24 பெருமாள்களும் கருட வாகனத்திள் மீது எழுந்தருளி அவரவர் கோயில்களிலிருந்து கொடிமரத்துமூலை வந்து திருமங்கை ஆழ்வார் முதலிலும் பின்னால் நீலமேகர், மணிக்குன்றர், வீரநரசிம்மர் ஆகிய திவ்ய தேசப் பெருமாள்கள் முன் செல்ல, பின்னர் வரிசையாக கருட வாகனத்தில் ராஜவீதிகள் அருள்வார்கள். மீண்டும் அவரவர் கோயில்களைச் சென்று அடைவார்கள்.

05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று 15 நவநீத சேவையானது மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனை "வெண்ணெய்த்தாழி மகோற்சவம்' என்று அழைப்பர். கொடிமரத்து மூலையிலிருந்து புறப்பட்டு 4 ராஜவீதி வழியாக அனைவருக்கும் அருள்பாலித்து மீண்டும் கோயில்களை அடைவார்கள். 

கருட சேவையில் 24 பெருமாள்களை தரிசிப்பதால் நம்மைப் பிடித்துள்ள சகல தோஷங்களும் நீங்கும் .

15 நவநீத சேவை தரிசனத்தால் நமது நியாயமான ஆசைகள் விரைவில் பூர்த்தியாகும். 

தொடர்புக்கு: 04362-223387 / 04362-274476

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.