முகப்பு
வெள்ளிமணி

கவலைப்படாதிருங்கள்!

இந்த உலகில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கவலை என்பது ஏதோ ஒருவகையில் வந்து தாக்குகிறது. அது, யாரையும் விட்டுவைப்பதில்லை.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

இந்த உலகில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கவலை என்பது ஏதோ ஒருவகையில் வந்து தாக்குகிறது. அது, யாரையும் விட்டுவைப்பதில்லை. கவலைப்படும் ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே இருப்பார். நிம்மதி இல்லாமல் தவிப்பார், என்ன செய்வதென்றே தெரியாமல் படபடப்புடன் இருப்பார்.
பரிசுத்த வேதாகமத்தில், தாவீது ராஜாவுக்கும் மனதில் கவலை இருந்தது. "எத்தனை நாளைக்குத்தான் இதயத்தில் வேதனையைச் சுமக்க வேண்டும்?' என்று வருத்தப்பட்டார். (சங்
கீதம் 13:2) கவலையை அவர் மேற்கொள்ள கடவுளிடம் ஜெபம் செய்தார். தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தார். தன்மீது கடவுள் அன்பு வைத்திருக்கிறார் என்றும் தனக்கு நிச்சயம் உதவுவார் என்றும் நம்பினார். (சங்கீதம் 13:5) அதேபோல், நம் மனதில் இருக்கும் கவலைகளை தேவன் மீது வைத்து விடும்போது அவர் அவற்றை நம்மை விட்டு நீக்குவார் என்று விசுவாசிக்க வேண்டும். அவ்வாறு விசுவாசிக்கும் போது கவலைகள் பறந்தோடிப்போகும்.
அனைவருடைய உள்ளங்களிலும் எப்போதும் ஏதோ கவலைகள் குடிகொண்டிருக்கின்றன. கவலைப்படும் சமயங்களில் நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். அதாவது நான் எதற்
காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது தேவைதானா..? இப்படி கேட்டு பார்த்தால் கவலைப்படும் விஷயங்கள் பெரும்பாலானவை கவலைப்படத் தேவையற்ற சில அர்த்தமற்ற விசயங்களாக தென்படும். கவலைகள் மலையாக உருவெடுத்து, தன் மேல் அமர்ந்திருப்பதைப் போன்ற மனநிலையை வளர்த்தல் கூடாது. 
நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணத்தில் எதிர்படுகின்ற தடைகளும், போராட்டங்களும் தான் வாழ்க்கை. எனவே கவலைகளை வளர விடாதீர்கள்.
மத்தேயு 6: 27-இல் ""கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?'' என்று எழுதியிருக்கிறது. ஆகவே மனதில் உள்ள கவலைகளை தூக்கி எறியுங்கள்.  
நீதிமொழிகள் 12:25-இல் மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மனம் நன்றாக இருந்தால்தான் செய்யும் காரியங்கள் வாய்க்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். அந்த மனதை ஒடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் கவலை. இதை நம்மை விட்டு அகற்ற அதை தேவன் மீது வைக்க வேண்டும்.
அவர்(இயேசு) உங்களை விசாரிக்கிறவரான
படியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1 பேதுரு 5:7).  பரிசுத்த பவுல், பிலிப்பி சபையில் தன் நண்பர்களை உற்சாகப்படுத்த  ""நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்'' (பிலி. 4:6) என்றெழுதினார். அனைத்தையும் தேவன் பார்த்துக்கொள்வார் என்ற விசுவாசம் நமக்கு வரும்போது இந்த கவலை நம்மை விட்டு ஒடிவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.