வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

DIN

• ஆத்மாதான் இந்த அழியும் உடலில் ஜீவனைப் புகுத்தி இயங்க வைத்திருக்கிறது; ஜடமான இந்தத் தேகத்துள் உணர்வையும், அறிவையும் வைத்திருக்கிறது. இந்த அவலட்சணமான மேனிக்கு மினுக்கும், வனப்பும் ஊட்டுவதும் அதுவே. ஆத்மாவின் இயக்கத்தால்தான் ஜீவராசிகளின் வாழ்க்கை மலர்கிறது; இயங்கி வருகிறது.
- ரிக் வேதம்
• பாலில் வெண்ணெய் மறைந்திருக்கிறது. அதுபோன்று ஆத்மா உயிர்களில் வசித்திருக்கிறது. அது மனம் என்னும் மத்தால் சதா கடையப்பட வேண்டும்.
- அம்ருதபிந்து உபநிஷதம்
• காரணத்துக்கு அந்நியமாக காரியமில்லை. உதாரணம்: மண்ணினால் உண்டாக்கப் பெற்ற பானை முதலிய பண்டங்கள், மண்ணுக்கு அந்நியமாக இல்லை; நூலினால் நெய்யப் பெற்ற புடவைகள் நூலுக்கு அந்நியமாக இல்லை; தங்கத்தால் செய்த ஆபரணங்கள் தங்கத்துக்கு அந்நியமாக இல்லை; இரும்பினால் செய்த ஆயுதங்கள் இரும்புக்கு அந்நியமாக இல்லை. அதுபோல்தான் ஆத்மாவினால் உண்டாக்கப் பெற்ற பிரபஞ்சங்கள், ஆத்மாவேயன்றி வேறில்லை.
- வாசுதேவ மனனம்
• களங்கமற்ற புத்தியால் நன்றாக ஆராய்ந்து பார், ஆன்மிக உண்மைகளை நீயே அறிந்துகொள்வாய்.
- திரிபுர ரகஸ்யம்
• திருமணமாகும் வரை பெண்களுக்குத் தாய், தந்தையரே தெய்வம். திருமணமான பின்பு கணவனே பெண்களுக்கு தெய்வம். விதிவசத்தால் கணவர் வறுமையினால் வாடினாலும், நோயினால் துன்புற்றாலும், கைபிடித்த கணவரைவிட்டு ஒரு நொடியும் அகலாத உத்தம பத்தினியரை இந்திராதி தேவர்களும் வணங்குகிறார்கள். உயிர் நீங்கிய சடலத்தைக்கூட நிழல்விட்டுப் பிரிவதில்லை. அதுபோன்றே எக்காலத்திலும், எந்நிலையிலும் மனைவி, கணவரை விட்டுப் பிரிந்திருக்கக் கூடாது.
- மாமன்னர் நளனின் தேவியான கற்புக்கரசி தமயந்தி
• எவனுடைய சித்தத்தை பெண்களின் கடைக்கண் பார்வையாகிய அம்பு துளைக்கவில்லையோ, கோபத்தால் ஏற்படும் தாபம் எவனுடைய மனதைச் சுடவில்லையோ, பரந்து கிடக்கும் விஷயங்கள் பேராசைக் கயிறுகளால் எவனை இழுக்கவில்லையோ அந்தத் தீரன் இந்த மூவுலகையும் முற்றும் வெல்லக் கூடியவனாவான்.
- பர்துருஹரியின் நீதி சதகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT