வெள்ளிமணி

முன்ஜென்ம வினைதீர்க்கும் பாலேஸ்வரர்!

தினமணி

தொண்டை மண்டலத்தில் பாலாற்றங்கரைக்கு மேற்கே சென்னை திருச்சி சாலையில் செங்கல்பட்டிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் பாலாற்றங்கரை பாலம் இறக்கத்தில் வலது பக்கம் பிரிந்து செல்லும் சாலையில் மெய்யூர், சாலவாக்கம் சென்று பாலேஸ்வரம் கிராமத்தை அடையலாம். பாலேஸ்வரத்தில் மிகப் புராதமான 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோயில் பராமரிப்பின்றி சிதைந்து புதர்கள் மூடியிருந்தது. அக்கிராம மக்கள் அந்த புதர்களை அகற்றி வட்ட வடிவமுடைய ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத்தையும், காது உடைந்த நிலையில் ஓர் நந்தியையும் எடுத்து ஓர் கீற்றுக் கொட்டகையில் வைத்து பூஜித்து வந்தனர்.
 உடைந்த நிலையில் சண்டீகேஸ்வரர் மற்றும் அம்பிகை சிலையும் உள்ளது. ஊர் மக்கள் திருக்கோயில் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு பாலாலயம் செய்யப்பட்டு தற்போது ஆலய திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
 கருவறை: ஸ்ரீ பாலேஸ்வரர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானுக்கு மேற்கு நோக்கிய சந்நிதி பழைய அளவுகள்படி கட்டி முடிக்கப்பட்டு அந்தராளம், முகமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேற்கு பார்த்த சந்நிதி அமையப்பெற்ற இடங்களில் முற்காலத்தில் அகத்தியர் பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.
 அம்பிகை சந்நிதி : அம்பிகையின் பெயர் ஸ்ரீ குழல் மொழியம்மை. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அம்பிகை சந்நிதி அமைக்கப்பட்டு வருகிறது. கருவறைக்கு வலப்பக்கம் இச்சந்நிதி அமைவது சுவாமியின் திருக்கல்யாண கோல அம்பிகை சந்நிதியாக விளங்குகிறது. மேலும் சண்டிகேஸ்வரர் சந்நிதி, நந்தி மண்டபம், விநாயகர், முருகர் சந்நிதிகள், பைரவர் சந்நிதி மதிற்சுவர், மடப்பள்ளி போன்ற திருப்பணிகள் நடைபெறவேண்டியுள்ளது. இத்திருக்கோயிலின் தலவிருட்சம் இலுப்பை மரம்.
 ஆலயத்தின் சிறப்புகள் : பிறவிக்கடன் தீர்க்கும் தலம், (ரிண, ருண, சத்ரு) கடன், நோய் எதிரிகள் தொல்லை தீர்க்கும் தலம்.
 பரிகாரம் : திருமணத் தடைகள் நீக்கி திருமண பாக்கியம் அருளும் தலம். முன்ஜென்ம வினை தீர்க்கும் தலம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயிலில் திருப்பணியில் அனைவரும் பங்கேற்று பொன் பொருள் உதவி செய்து எம்பெருமான் பாலேஸ்வரரின் திருக்கருணைக்கு ஆளாகி பிறவிக்கடனை தீர்த்துக் கொள்வதோடு நமது சந்ததியினருக்கு புண்ணியத்தையும் சேர்த்திடலாம்.
 பேருந்து வசதிகள்: நகரப்பேருந்து செங்கல்பட்டு - குண்ணவாக்கம் செல்லும் வழியில் பாலேஸ்வரம் உள்ளது.
 தொடர்புக்கு : 99402 00394 / 97871 05381.
 - க. கிருஷ்ணகுமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT