வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

DIN

* எவன் எதைப் பற்றி எந்த வகையில் சிந்திக்கிறானோ, அதை அதே வகையில் அனுபவிக்க ஆரம்பித்துவிடுகிறான். 
- யோகவாசிட்டம்
* இல்லறத்தான் எந்த உயிருக்கும் இம்சை செய்யக் கூடாது; திருடக் கூடாது; பொய் பேசக் கூடாது; கள் முதலிய போதைப் பொருள்கள் அருந்தக் கூடாது; பிறர் மனைவியை விரும்பக் கூடாது; இரவில் காலம் தாழ்த்தி உணவுகொள்ளக் கூடாது.
- பெளத்த மதம்
* நம் உள்ளத்தில் நிம்மதி இருந்தால்தான், நாம் உலகமெங்கிலும் அமைதி நிலவுவதாக உணருவோம். 
- யோகவாசிட்டம்
* தாறுமாறான எண்ணங்கள் கொள்ளுதல்; ""தானத்தினால் என்ன பயன்?'', ""யக்ஞம் செய்தவர்கள் என்ன கண்டார்கள்?'', ""புண்ணியமாவது, பாபமாவது'', ""இந்த உலகத்திலும் தர்மம் ஒன்றுமில்லை, பரலோகமும் கிடையாது'' என்றெல்லாம் நினைப்பது தவறாகும். 
- பெளத்த மதம்
* உலகில் வாழும் மக்கள் அனுபவிக்க நேராத துயரமே கிடையாது. இந்த உலகம்தான் எல்லாத் துயரங்களுக்கும் தோற்றுவாய், இதில் வாழும் மனிதனுக்கு இன்பம் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்? எல்லாத் துயரங்களும் முடிவு ஆத்மஞானம் ஒன்றுதான்.
- யோகவாசிட்டம்
* நீதி சபையில் ஒரு பக்கம் சார்ந்து பொய்சாட்சி சொன்னவன் வீடு, வாசல் ஆகியவை அழிந்துவிடும்.
- நல்வழி
* பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு நான்கு வழிகள்தான் இருக்கின்றன. அவை சமம் (சாந்தம்), சந்தோஷம் (திருப்தி), நல்லோர் பெரியோர் சேர்க்கை, ஆன்மிகச் சிந்தனை ஆகியவை ஆகும். 
- யோக வாசிட்டம் 
* விவசாயம் செய். அதிலிருந்து கிடைப்பது குறைவாக இருந்தாலும் அதையே மிகுதியானது என்று கருது.
- யஜுர்வேதம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT