வெள்ளிமணி

பொன்மொழிகள்!

சுவாமி கமலாத்மானந்தர்

எல்லாப் பொருள்களிலும் உயர்ந்த வித்யைதான் (கல்விதான்) மேலான பொருளாகும். ஏனென்றால் அதை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அது தூய்மையானது; எப்போதும் குறையாதது.
- இதோபதேசம்

பசிக்கொடுமையால் அவதிப்படும்போது தாய் மகனைக் கைவிடுவாள், பெண் பாம்பு தன் முட்டைகளையே சாப்பிடும்; பசித்தவன் எப்படிப்பட்ட பாவம் செய்யவும் தயங்கமாட்டான். அதேபோல் வீழ்ச்சியடைந்தவர்களும் கருணையற்றவர்களாகிறார்கள்.
- மகாபாரதம்

அனைவருக்கும் ஆதாரமாகவும், ஆத்மாவாகவும் பரமாத்மா விளங்குகிறார். அவர் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் "விஷ்ணு' என்ற பெயரால் போற்றப்படுகிறார்.
- விஷ்ணு புராணம்

இறைவா! தாங்கள் எல்லையற்றவர். நாங்கள் எல்லைகளுக்கு உட்பட்டவர்கள். ஆதலால் எல்லைகள் கொண்ட சொற்களால் தங்களைப் போற்றுகிறோம். "தாங்கள் உள்ளபடியே எவ்வளவு மகத்தானவர்' என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்?
- குருநானக்

சொல்லும் அதன் அர்த்தமும் ஒன்றாக சேர்ந்திருக்கிறது. அதுபோல் ஒன்றியிருக்கும் உலக மாதா பிதாவான பார்வதிதேவியையும் பரமசிவனையும் நான் வணங்குகிறேன்.
- மகாகவி காளிதாசன், ரகுவம்சம் 11

"அதிதி' என்ற தேவியாக இருப்பவளும், "திதி' என்ற தேவியாக விளங்குபவளும், ஒளிபொருந்தியவளும், வளமளிக்கும் பூமியாக இருப்பவளும், செல்வத்தைத் தாங்குகிறவளும், விரும்பியவற்றை அளிப்பவளும், பாற்கடலில் உதித்தவளுமாகிய மகாலட்சுமியை நான் வணங்குகிறேன்.
- லட்சுமி அஷ்டோத்தரசதநாம ஸ்தோத்திரம்

முதியவர்கள், அரசர்கள், பாரம் சுமப்பவர்கள், வேதம் போன்ற சாஸ்திரங்களைப் படிப்பவர்கள், சந்நியாசிகள், பெண்கள், நோயாளிகள், குயவர்கள் ஆகியவர்களுக்கு வழிவிட வேண்டும்.

இவர்கள் எல்லோரையும்விட அரசரே முக்கியமானவர். சந்நியாசியோ அரசராலும் போற்றப்படுபவராவார்.
- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT