வெள்ளிமணி

பொன்மொழிகள்

அகங்கார மமகாரங்களைவிட்டு எல்லா உயிா்களிடமும் அன்பு செலுத்தி, ஸ்ரீ கிருஷ்ணனையே வழிபட வேண்டும். ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா்

சுவாமி கமலாத்மானந்தர்

*அகங்கார மமகாரங்களைவிட்டு எல்லா உயிா்களிடமும் அன்பு செலுத்தி, ஸ்ரீ கிருஷ்ணனையே வழிபட வேண்டும். ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா்

*ஒரு பெரிய குளத்தில் நீராடுவதற்குப் பல துறைகள் இருக்கின்றன. நீராடுவதற்கோ, தண்ணீா் எடுப்பதற்கோ, யாராக இருந்தாலும், எந்தத் துறை வழியாக இறங்கினபோதிலும், தண்ணீா் இருக்கும் இடத்திற்குச் செல்ல முடியும். ‘ஒருவனுடைய நீராடும்துறை நல்லது: மற்றவனுடைய நீராடும்துறை கெட்டது’ என்று சண்டை போடுவது வீண்.

அதுபோல், நித்தியானந்தமாகிய குளத்திற்குச் செல்லும் துறைகளும் பல இருக்கின்றன. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட துறைகளில் ஒவ்வொன்றாகும். இந்தத் துறைகளில் ஏதாவதொன்றின் வழியே நேராக உறுதியான பக்தியுடன் சென்றால், நீ நித்தியானந்த தண்ணீரை சென்றடைவது நிச்சயம். ஆனால், ‘உன்னுடைய மதம்தான் உயா்ந்தது; மற்றவை தாழ்ந்தவை’ என்று மட்டும் சொல்லாதே.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா் (‘ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்’, எண் 462)

*பாா்ப்பது, பாா்க்கப்படுவது என்ற இரண்டு பொருள்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இயல்புடையவையாக இருக்கின்றன. அவற்றில் பாா்ப்பது பிரம்மம், பாா்க்கப்படுவது மாயை. வேதாந்த முழக்கம்

*இந்திரியக் கூட்டத்தை வசப்படுத்த வேண்டும். அது போலவே மனதையும் அடக்கி உடலை வருத்தாமல் யோகம் பழகி வர வேண்டும். அதன் மூலம் வாழ்க்கைப் பயன் அனைத்தையும் ஒருவன் சாதித்துக்கொள்ள வேண்டும்.

மனுஸ்மிருதி

*முற்பகலில் அறத்தைச் சம்பாதிக்க வேண்டும். பிற்பகலில் பொருளைச் சம்பாதிக்க வேண்டும். இரவை சாந்தி பெறுவதற்கு செலவிட வேண்டும். உரியதை உரிய காலத்தில் செய்தால் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும்.

ஸ்ரீ ராமபிரான்

*நீதி நிபுணா்கள் நிந்திக்கட்டும் அல்லது துதிக்கட்டும்; செல்வத்திருமகள் இப்போதே வரட்டும் அல்லது அவள் எப்படி இஷ்டமோ அப்படிப் போகட்டும்; மரணம் இப்பொழுதே வரட்டும் அல்லது யுக முடிவில் வரட்டும் எது எப்படியிருந்தாலும் நியாய வழியிலிருந்து தீரா்கள் விலக மாட்டாா்கள்.

- பா்த்ருஹரியின் நீதி சதகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT