வெள்ளிமணி

பலன்தரும் பரிகாரத் தலங்கள் 

ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி ஆலயம் ஸ்ரீராமபிரானால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் உடைய ஆலயம். இங்கு 22 கிணறு தீர்த்தம் உள்ளது. இந்த நீரில் குளித்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். 

ஆர்.விஜயலட்சுமி


ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி ஆலயம் ஸ்ரீராமபிரானால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் உடைய ஆலயம். இங்கு 22 கிணறு தீர்த்தம் உள்ளது. இந்த நீரில் குளித்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். 

கன்னியாகுமரியில் கடல் அருகில் உள்ளது கன்னியாகுமரி அம்மன் கோயில். அக்காலத்தில் கடல் கடந்து செல்பவர்கள் இந்த அம்மனின் சக்தியால் நல்ல பலன்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வந்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். 

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் போகும் வழியில் உள்ளது கூத்தனூர். இங்கு சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் உண்டு. இந்த அம்மனை வழிபட்டால் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. 

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள குழந்தை கிருஷ்ணர் விக்கிரகத்தை சிறிது நேரம் கையில் வைத்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

மதுரை அருகே மடப்புரம் என்ற ஊரில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டால் வரவேண்டிய பணம் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புதுச்சேரியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோயிலில் விசேஷ தினங்களில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் வீடு வாங்கும் யோகம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது. 

கோயமுத்தூர் அருகில் உள்ளது பேரூர் ஸ்ரீபட்டீஸ்வரர் கோயில். இக்கோயிலின் இறைவன் வட கைலாய நாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஈசனை தரிசித்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT